பக்கம்:கங்கா.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் அம்மா அடிக்கடி சொல்லுவா : “நாக்கைப் பிடுங் கிண்டு சாகலாம் போல இருக்கு; ஆனால், கைதான் எச்சிலாப் போயிடுமேன்னு பாக்கறேன்"- அப்போல்லாம் அதுக்கு சரியான பதில் என்னன்னு தெரியாது. இப்போ தெரியும்; "ஏம்மா, சாகத் துணிஞ்ச பிறகு, எச்சிலைப்பத்தி என்ன கவலை?” அப்போ கேட்கத் தெரியாது. கேட்டிருந்தாலும் முதுகில்தான் கிடைத்திருக்கும். ஆனால், கேட்டாலும் கேட்டிராவிட்டாலும், அம்மா சொன்னதில் வாஸ்தவம் இருக்கென்றே தோணறது. பாறேன், சாகணும்னு வந்திருக்கிறேன். ஆனால், இந்த ஜலம் இப்படி நாறுகிறதே உவ்வே - வாடை வயிற்றைக் குமட்றது. சாகத் துணிஞ்ச பின் நாற்றத்தைப் பற்றி என்ன கவலை ? சாவில்கூட மனம் சுகம்தான் நாடு கிறது, சந்தேகமேயில்லை. ஆனால், இன்னிக்கு நான் பார்த்திருக்கும் வேளை சரியில்லேன்னுதான் தோன்றுகிறது. எதிர் பெஞ்சில் இந்தக் கிழவி இன்னும் உட்கார்ந்திருக்கிறாள். உட் கார்ந்த இடத்தை விட்டு அசையவுமில்லை. இதுவரைக் கும் என்னை ஏன் என்று கேட்க யாருமில்லாமல், இந்த சமயத்துக்கு எங்கிருந்து இவள் காவல் வந்தாள் ? இருக் கட்டும், பார்க்கலாம். இன்னும் வேண்டிய பொழுது இருக்கிறதே ! பாட்டி, அம்மா அப்பாவிடம் சொல்லிண்டிருப்பாள். நான் பம்பரம் ஆடிண்டிருப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/135&oldid=764310" இலிருந்து மீள்விக்கப்பட்டது