பக்கம்:கங்கா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

கங்கா


ஆனால், எனக்கென்னவோ மாமிதான் இஷ்டம். சுட்ட அப்பளத்திலிருந்து மாமா வாங்கிவரும் பொட்டலம் வரை எனக்கு எப்பவும் ஒரு பங்கு வைத்திருப்பாள். "போறது, இந்த ஜன்மத்தில்தான் இல்லை. வர ஜன்மத்திலாவது வாய்க்காதா !” மந்திரம் மாதிரி ஜபிச்சுண்டே அல்வாத் துண்டைத் தானே தன் கையால் என் வாயுள் தள்ளுவாள். நாக்கு, நெஞ்சு, மார்பு, வயிறு, உடம்பு முழுக்க உள்ளே தித்திக்கும். z "என்ன வாய்க்காதா ?- வாய் நிறைய முழுங்க முடியாமல், குதப்பிண்டே கேட்பேன். - என்னை ஒரு தினுசாய்ப் பார்த்துண்டே-கண் கோகு லாஷ்டமி நாவல் பழம்போல் பளபளக்கும்-'கண்ணன்' என்பாள். Bore பசங்க கூடக் கேலி பண்றான்கள். "டேய், இன்னிக்கென்னடா பேர் வெச்சிருக்கு?" "தினம் பேர் வெச்சா உங்காத்திலே தினம் பாயலம் உண்டா ?” "என்னடா, அவனைச் சும்மா கிண்டல் பண்ணிண்டு? சுவாமிக்கு அஷ்டோத்ரம் இருக்கறப்போ, மனுஷனுக்கு நாலுகூட இருக்கப்படாதா ?” . அன்றிலிருந்து ஐந்தாவதாய் அஷ்டோத்ரம்னு ஒரு பேர் கூட ! தொட்டால் குற்றம், திரும்பினால் குற்றம். "ராஜா, கூடம் அதிர்றது, ஓடாதே பூமாதேவிக்குப் பொறுக்காது t" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/138&oldid=1283340" இலிருந்து மீள்விக்கப்பட்டது