பக்கம்:கங்கா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கங்கா


நான் வளர்றது எனக்கே தெரியறது. உள்ளே சதையின் குறுகுறுப்பு உடம்பு தாங்கல்லே. நான் கண்ணாடியில் என்னைப் பாக்கறப்போ ஒரொரு சமயம் எனக்குத் தோணும் : இப்பொ கண்ணுக்குத் தெரியறமாதிரி ஒரு தலை, ஒரு மூக்கு, ரெண்டு கண், ரெண்டு கை, ஒரு வயிறு, இரண்டுகால்... ... இது மாதிரி, இது மாத்திரந்தானே பார்க்க முடியறது ? ஆனால், இந்தத் தோலுக்கடியில் இன்னும் எத்தனை கண், மூக்கு, காது? இன்னும் இது வரைக்கும் உலகத்திலிருந்து மானம் வரைக்கும் கண்ணால் கூடக் காணமுடியாமல், இன்னும் பேர்கூட வைக்காமலே, இன்னும் என்னென்ன. எத்தனை எத்தனை முளைச்சிருக்கும் ? பூவுக்குள்ளே இதழ் இதழாய் மரத்துக்குள்ளே முண்டும் முடிச்சுமாப்போல் உடம்புக்குள்ளே, தோலின் கெட்டிக்கடியிலே இன்னும் என்னென்ன ? எத்தனை எத்தனை ? இதைப் பார்த்துத் தெரிஞ்சுண்டுடனும்- ஆத்திரம் மீறிப் போச்சு. ஒரு சமயம் அப்பா கூடிவரம் பண்ணிண்டு எறிஞ்சுட்ட ப்ளேடாலே நானே கட்டை விரலை வெட்டிண்டேன். . ரத்தம் பீச்சியடிச்சுது.. பயமாப் போச்சு. காயத்தி லிருந்து கிளை கிளையா, கொடி கொடியாப் பிரிஞ்சு உள்ளங்கையில் வழிஞ்சுது. ஆனால், வேறொண்ணுந் தெரியல்லே. . அம்மா பார்த்துப் பயந்து போனாள். 'லபலப'ன்னு: வாயிலடிச்சுண்டா. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/140&oldid=1283342" இலிருந்து மீள்விக்கப்பட்டது