பக்கம்:கங்கா.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

கங்கா

, ஏன், எனக்கு ரோசமில்லையா? வலிக்காதோ ? வலிச்சால் அழுகை வராதோ ே நான் ஒண்னும் துடைச்சுப் போட்டுடல்லே. அது அமுங்கிப் போறது, அவ்வளவுதான். அன்னிக்கு மழை பேஞ்கதே. அப்போ கொல்லை. யிலே, பள்ளத்திலே சேறு-என்னவோ உளையாமேஅங்கே ஒத்தரும் போகக்கூடாதுன்னு அப்பா உத்தரவு போட்டு, அதில் ஒரு கல்லை விட்டு எறிஞ்சு காண் பிச்சாரே, அது மெதுவாய் மனசில்லாமல், அமுங்கி உள்ளேயே போயிடுத்தே. அது மாதிரி அமுங்கிப் போறது. அவ்வளவுதான். உடம்புக்குள்ளே உடம்பு எப்படி வளர்றது ? உள்ளே என்னென்ன் சக்கரம் எப்படிச் சுழல்றது மாரில் எப்படி டக் டக் கேக்கறது? அப்பா கடியாரத்தில் "டிக் டிக்" பார்க்க கடியாரத்தைப் பின்னாலே திறக்கணும். அது மாதிரி, அப்பாக்குக் கோவம் வந்தால், முதுகைப் பிளந்துாடுவேன்கறா. ஆனால், அப்படி என்னைப் பின்னால் திறந்துட்டாலும். நான் எப்படிப் பாத்துக் கறது ? கழுத்தை என்ன ஒடிச்சுண்டாலும், முதுகு இரக்கும் பின்னாலே திருப்பிக்க முடியாதே ! இந்தப் பழசு, இத்தனைப் பழசுகள் எல்லாம் இப்போ ஏன் நினைவுக்கு வருகின்றன? இந்த அம்மா இன்னும் நகரவில்லையே? நேரம் ஆகல்லியா? எனக் குத்தான். நாளில்லை, கிழமையில்லை, போக்கிட மில்லை. தீபாவளியுமதுவுமா இந்நேரம் இவள் இங்கே என்ன பண்ணறாள் ? பட்டாசை அடுப்பில் காச்ச வேண்டாமா ? மருந்து இழைக்க வேண்டாமா, மாட்டுப் பெண்களுக்கு மருதாணி இட வேண்டாமா ? வேலையை சின்னவா பார்த்துக் கொண்டாலும், பேரன் மார் பட்டாசு கொளுத்தறதையாவது பார்க்க வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/142&oldid=1283344" இலிருந்து மீள்விக்கப்பட்டது