பக்கம்:கங்கா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

129


டாமா ? சப்தங்கள் கேட்க ஆரம்பித்தாச்சே ? இவள் கழுத்துச் சங்கிலியைப் பிடுங்கிண்டு, இந்த இருட்டில் இவளை இப்படியே குண்டுக்கட்டாய்த் தூக்கி, இந்த ஜலத்தில் எரிய மாட்டேன் என்று இவள் என்ன கண்டாள்? ஆனால், எனக்கொன்றும் அவசரம் இல்லை. வேண்டிய பொழுது இருக்கிறது. தானாக எழுந்து போகிறாளா, பார்க்கலாம். எனக்கு அவசரமே இல்லை. இந்தத் துணிவுக்கு எப்போது வந்தேனோ, அப்பவே என்னைச் சுற்றி என்னைக் கட்டிய காலத்தின் கோடுகளை அழித்து விட்டேன். இல்லாவிட்டால்: நினைவுகள் இந்த மாதிரி அவைகளின் அடிப்படையை இழந்து, அடியில் புதைந்தவை எல்லாம் எப்படி மேலே வரும் ? அப்படி யப்படியே, அப்பட்டமாய், அதனதன் அப்போதைய வடிவங்களிலேயே "நான் செத்தாலும் இது இருக்கும்’னு பெருமையாச் சொல்லிண்டே பாட்டி போடுவாளே, சுருள் சுருளாய், எண்ணெய் பளபளத்துண்டு, ஜாடியுள் பாம்புபோல், கெடாமல் வருஷமாய் உறங்குமே நார்த்தங்காய் ஊறு காய் மாதிரி. பாட்டி ஊறுகாய் போடும்போதெல்லாம், அதன் பெருமையை ஜபிச்சுண்டே ஒரு காலை நீட்டியபடி, அரிவாமனையில் காயைச் சுருளின் வளையம் கெடாது, ஒரே சுருளாய் நறுக்குவாள். "இது இந்தச் சீமைக்காராளுக்குப் பிடிக்காது.” (இது அம்மாவை ஒரு குத்தல்) எனக்கென்ன, இதைப் பிடிக் காதவா கொடுத்து வைக்காதவா, கசப்புக்குப் பயந்தவா ருசியை ஏமாந்தவா. எனக்கென்ன, உண்டவாதான் மகிமை கண்டவா. இன்னும் தொப்புள் கொடி விழாத பச்சைக் குழந்தைக்காரிக்குப் போடலாம், ஒண்னும் பண்ணாது; இரும்பை. ஜீரணம் பண்ணிடும்.” க-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/143&oldid=1283345" இலிருந்து மீள்விக்கப்பட்டது