பக்கம்:கங்கா.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5)許。 学。"原TT。 13i ஷொட்டு. தப்பே பண்ணவேண்டாம் வெறுமனே புதுசு உடுத் திண்டாலோ, நாள் கிழமைக்கு நமஸ்காரம் பண்ணாலோ அப்பவும் "சமத்-த்-த்தாயிரு"ன்னு அழுத்தந்திருத்தமா ஆசீர்வாதம். . சமத்தாயிருக்கறதுன்னா, யார் சொன்னதையும் கேட்டுண்டு எல்லாரிஷ்டப்படிக்கும் இ ரு க் கணு ம். அதானே ? என்னிஷ்டம்னே கூடாது. இந்த மரம் மாதிரி மரமாயிடணும். வெய்யில்லே காயனும், மழையில்ே நனையனும், காற்றில் அலையனும், கல்லடி படனும், வெட்டுக்காயம் படனும் பூவைக் கொட்டனும், காயைத் தரனும், பழமாத் தொங்கனும், நிழலைக் கொடுக் கனும், நின்ன இடத்தை விட்டு நகரக்கூடாது; இத்தனையும் ப ட் டு ண் டு ஊமையாயிருக்கணும்; உசிரோடேயும் இருக்கணும். அதானே ? இது எனக்கு வருமோ ? அப்பறம் பெரியவாள் தங்களுக்குள்ளே என்னவோ அடிக்கடி சொல்றா "இதென்ன உன்னிஷ்டமா, என்னிஷ் டமா ? மரம் .ெ வ ச்ச வ ன் தண்ணி ஊத்தாமலா போறான் ?” இந்த ம தி ரி மரமாயிருக்கறதுக்கு இதுக்குத் தண்ணி ஊத்தி, இதுக்கு ஏதோ பெரிய தயவு பண்ணிட்ட மாதிரி. ஐயோ, நான் மாட்டேம்பா இந்தச் சமத்து என்னால் இருக்க முடியாது. எனக்கு வேண்டவும் வேண்டாம். எனக்கு என்னிஷ்டம் கிடையாதாம், அவர்களுக்கு மாத் திரம் அவா இ விடி ட ம் உண்டாம். ஏனோவாம், என்னிஷ்டம் என்ன ஆறது ? என்னிஷ்டம்னு எனக்கு இருக்கே இருக்கறத்தை இல்லேன்னா, இல்லேங்கப் பண்ணால் அது மாத்திரம் பொய் சொன்ன மாதிரி, பொய் பண்ண மாதிரி ஆகாதோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/145&oldid=764321" இலிருந்து மீள்விக்கப்பட்டது