பக்கம்:கங்கா.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 - கங்கர எனக்கு இஷ்டம், குழம்புஞ் சாதம். அதுவும் வெங் காய சாம்பார் பண்ணிட்டா கூடக் கத்தரிக்கா (அப்படியே முழுசா நடுவுலே பிளந்து) முள்ளங்கி, முருங்கக்காய், எல்லாம் சேர்த்துப் போட்டு-அப்பா நாக்கிலே தண்ணி ஊர்றது கன்னம் வலிக்கிறது. "ஏய் உன்னைத்தான் ! குழைச்சு செவுர் கட்டாதே, மோருக்குப் போ !” என்னை அப்படிச் சொல்லிட்டு, அப்பா ரஸத்தைக் குளம் கட்றார். அதன் பேர் என்ன வாம் ? அப்போ, அவருக்கு அவரிஷ்டம் உண்டு எனக்கு என்னிஷ்டம் கிடையாது. ஏனாம் ? அம்மாவை ஏதாவது கேட்டால் "அதெல்லாம் அப்புறம் அப்பா மாதிரி நீயும் பெரியவனாறப்போ, அப்போ” என்கிறாள். எப்படி நான் நாளைக்கே பெரியவனாறது ? எனக்கொரு யோசனை தோணறது. கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் பாட்டி ரெண்டு காலையும் நீட்டிண்டு, ரெண்டு காலையும் தடவிண்டுகால் மரத்துப் போறதாம் - உக்காந்திருக்கா, பாட்டி தானே இந்தாந்துக்கே பெரியவள், அவன்னக் கேட்டால் தெரியும். ‘பாட்டி நீ எப்போ பெரியவள் ஆனே ? பாட்டிக்குத் தூக்கிப் போட்டு, ரெண்டு கையையும் கன்னத்தில் வெச்சுக்கிறாள். "இதென்னடியம்மா அக்ரமம்? கலி ஆனாலும் இப்படியா முத்திப் போகணும் ?” , - . அம்மா உள்ளிருந்து விடுவிடுன்னு வந்து, என்னைக் கையைப் பிடிச்சு இழுக்கறா. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/146&oldid=764322" இலிருந்து மீள்விக்கப்பட்டது