பக்கம்:கங்கா.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●脑”。学。即s。 i:33. £ ரகஸ்யமா, உஷ், அப்படியெல்லாம் தத்துப்பித் துன்னு பேசாதே, !” உள்ளூர அவளுக்கு சிரிப்பு பொங்கறது. எனக்குத் தான் புரியல்லே: பாட்டி கேலிக் குரலில், "PGవిDr. பெரியவா சிrை யாக்கும் !” - அம்மாவுக்கு இப்போசிரிப்பை யடக்கவே முடியல்லை. "இல்லே, அப்படி யில்லேம்மா. இப்படி-"ன்னு புரியப் பண்ணறாள். அது சரி, நான் பெரீஈஈஈயவளாயிருக்கறதை நீ தாண்டா மெச்சிக்கணும் ! நான் எதுக்குப் பிரயோஜனம், என்னத்துக்கு மதிப்பு ? நானும் இதோ நிக்கறது. பார்: இந்த மரமும் சரி.” வீட்டிலேயே பெரியவள் பாட்டிக்கும் மரமாயிருக்கப் பிடிக்கல்லே, சின்னவன் எனக்கும் பிடிக்கல்லே, அப்போ நாங்க ரெண்டு பேரும் ஒண்னுதானே ! 责 'ஏய், எங்கேடாயிருக்கே ?” மதனாவும், ஸாயியும் என்னைத் தேடிண்டு வரான்கள். லாயி ஒரு மூடின பெட்டி வெச்சிண்டிருக்கான். சுற்றிக் கறுப்புக் காகிதம் ஒட்டி, நடுவில் சின்ன துளைவிட்டிருக்கு. பார்த்தாலே ஆசையாயிருக்கு. "டேய் டேய், என்னடாது ?" ரெண்டு பேருக்கும் கண் பளபளக்கறது. வாய்க் குள்ளே சிரிப்பு கூத்தாடறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/147&oldid=764323" இலிருந்து மீள்விக்கப்பட்டது