பக்கம்:கங்கா.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

கங்கா


ஆமாம். இந்தச் சந்திரா விவகாரம்தான் வரவர ரொம்ப மோசமாய்ப் போச்சு. புள்ளி போட்டால் அவள், பற்றுத்தான் தூக்கி நிற்கும். எப்படியாவது அவளைத் தொலைத்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்படியே தான் எட்டு வருஷமா ஹரிஹரா அடே, அக்ரமம் பண்ணாதேடா யாராரோ வந்திருக்காளே, கவனிடா !” "என்ன, லார், வேனும் ? டில்பர்டோஸ் ஸ்டுரத்காரி பாம்பே காஜா, காசி ஹல்-” "அதெல்லாம் நமக்கென்னாத்துக்குங்க ஐயரே ! ரெண்டு போண்டா ஸாம்பார் நிறைய சாம்பார் விட்டுக் கொண்டாங்க. கையோடே ஒரு கப் காப்பி. சுருக்க ஆவட்டும் சரக்குப் பிடிக்கப் போவணும்-” காப்பி கலப்பதில் ஹரிஹரனுக்கு இணை எவருமே யில்லை, அது ஒண்ணுக்குத்தான் ஹரிஹரனை மணி ஐயர் வேலையில் வைத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லணும். காப்பிக்கு மாத்திரம் ஹரிஹரனுக்குத் தனிக் கைராசி- காப்பி ராசி. டிகாக்ஷனை ஸத்தாயிறக்கி, கெட்டிலில் ஊற்றி, இறுக மூடி, பால் குபு குபு' என்று மணத்துடன் புகைவர ஒரு பக்கத்தில் காய வைத்துக்கொண்டு, அப்போதைக்கப் போது "ஒரு கப் காப்பி !” “அரை கப் காப்பி ஸ்ட்ராங் !” என்று கூவல் கிளம்பும் பொழுதெல்லாம், சட்டென்று கெட்டிலை எடுத்து ஒரு சுழற்று சுழற்றி, டம்ளரில் டிகாக்ஷனை ஊற்றி, ஒரு கரண்டி பாலை உயரத் தூக்கி ஆற்றி, காப்பி பவுன் நிறமாய் மாறி நுரை தளும்ப, கம கமவென்று மணங் கமழ "சபாஷ் ! காப்பி என்றால் மணி ஐயன் ஹோட்டல் ானப்பா ! பாக்கியெல்லாம் பாடாவதியானாலும் காப்பி தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/162&oldid=1283351" இலிருந்து மீள்விக்கப்பட்டது