பக்கம்:கங்கா.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

153


நின்றாள். உடலெல்லாம் ‘வெடவெட வென்று உதறிற்று கடுஞ்ஜுரம். சற்று நேரம் எங்கேயோ ஞாபகமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, குனிந்த தலையுடன் ஹரிஹரன் உள்ளே நடந்தான். "மூணு நாளாய்க் கண்ணைத் திறக்கக்கூட முடி யல்லே என் நினைப்பேயில்லை- உங்களையும் காணோம்-இந்த வீட்டில் இத்தனை பேரிருக்கான்னு: பேரேயொழிய, மல்லாந்த வாய்க்குத் தண்ணு ஊத்தற மனுஷாள் ஒத்தருமில்லே- நீங்களோ ஹரிஹரனின் மூளை எங்கேயோ வேலை செய்து கொண்டிருந்தது. "தாகமோ நாக்கை வறட்றது. அன்ன ஆகாரம் பச்சைத் தண்ணு மூணு நாளாயில்லை. இப்பொத்தான் எழுந்திருந்து ஒரு வாய்க் காப்பித் தண்ணு போட்டேன் அதுக்குள்ளே குளிர் வந்துடுத்து - அதை மாத்திரம் கொஞ்சம் கலந்து கொடுங்கோ-பாலைக்கூடக் காய்ச்சி ஆயிடுத்து-" ஹரிஹரன் இன்னமும் பேசவில்லை. இவ்விடத்து நினைப்பில்லாமலே, சின்ன அடுக்கில் டிகாக்ஷனை இறக்கி, அதன் மேல் பாலை விட்டுக்கொண்டே கஷாயம் திரிவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிறகு, ஒரு கலக்குக் கலக்கி, ஒரு தரம் தூக்கி ஆற்றி னான்-தன்னினைவு சுறீலென்று எழுந்தது. மத்துக் கடைந்து பொங்கியது போன்ற அம்மன வெழுச்சியில் அவனுக்கென்ன தோன்றிற்றோ காப்பியை விசிறியடித்த வேகத்தில், எதிர்ச் சுவரில் பரவி விழுந்தது. அங்கிருந்து அது கோடு கோடாய் வழிவதை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/167&oldid=1283353" இலிருந்து மீள்விக்கப்பட்டது