பக்கம்:கங்கா.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது நிஜம் ? மூன்று நாட்களாய் மழை. பத்து நிமிஷம் அடித்து, பத்து நிமிஷம் காயும் மழையில்லை. பிசுபிசுவென ஓயாது நச்சரிக்கும் தூறல். வெளியிலும் போக விடாது, உள்ளேயும் இருக்க விட்ாது இம்சை, வாசலுக்கும். உள்ளுக்குமாய் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அலைந்தேன். ஊஹாடும் ஒரு "கேஸ் கூட வருவதாய்த் தெரியவில்லை. இத்தனை மழைக்கு இதென்ன ஒரு ஜலதோஷ ஜூரம் கூடவாயில்லை ? அலுப்புத் தட்டிற்று. மறுபடியும் வாசலில் வந்து எட்டிப் பார்த்தேன். என் பெயர் பொறித்த மரப்பலகையிலிருந்து இறங்கிய கசண்டாய் மழை ஜலம் மூக்கின் மேல் சொட்டிற்று. என் பெயரே பாதிக்குமேல் அழிந்துபோயிருந்தது. போர்டை மாற்ற இன்னும் கைவரவில்லை. வந்தவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம். "இதென்ன லார் நாடறிந்த பார்ப்பானுக்குப் பூனூல் எதற்கு ?” ஆனால், விஷயம் என்னவோ வேறு. அதற்கென்ன பண்ணுகிறது ? சம்சாரியென்றால் எல்லாவற்றையும்தான் கணக்குப் பண்ண வேண்டியிருக் கிறது. ஒரு சமயம் போலவே இருக்கிறதா ? பாரு எதற் கெடுத்தாலும் சொல்கிறாள்: "இரண்டு தம்பிடியுடன் ஒரு தம்பிடி சேர்த்தால்தானே அரையனா ஆகும் ? வெறு மெனே இரண்டு தம்பிடியை மாத்திரம் நிறுத்தி வைத்துப் பாருங்களேன். அதற்கு அரையனா மதிப்பு உண்டா ?” இதோ இப்போத்தான், இரண்டு நிமிஷத்துக்கு முன்னால் கூட சண்டை அறையில் அதன் ஆவி இன்னும் கலையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/170&oldid=764349" இலிருந்து மீள்விக்கப்பட்டது