பக்கம்:கங்கா.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா. H6}. "என்ன செய்யப்போறேள் ? ஏதோ சாமி தரிசனத் துக்கோ குழந்தைகளுக்கு முடியிறக்கவோ போனால் பொங்கித் தின்ன நமக்குன்னு நாலடி இருக்குமேன்னு பார்த்தேன்." "அதுக்கென்ன தம்பி வீட்டிலேயிறங்கினால் ஆகாதா? சத்திரம் மாதிரி வீடு பெரிதாயிருக்காதா?என்ன அப்படிப் பார்க்கிறாய் ?” "நீங்களென்ன இப்படியேதான் இருக்கப் போறேனா கடைசி வரைக்கும் ? "ஏன், எப்படி இருக்கிறேன் ?” "உங்கள் மனசுக்குள்ளே நீங்கள் பெரிய ரிஷி என்று எண்னமா ?” "ஐந்து குழந்தைகளைப் பெற்று வைத்துக்கொண்டு நான் ரிஷி என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள் ?" "உங்களுக்கு அந்தப் பொறுப்பு இருக்கோ ?” எனக்குக் கோபம் வந்துவிட்டது. "நீ வாத்தியார் மாதிரி என்னை நிறுத்தி வைத்துக் கேட்கிறது நன்றா வில்லை. என்னை என்ன பண்ணச் சொல்கிறாய் ? அவன் என் தம்பி.” "யார் இல்லேன்னா ?’ பாருவுக்கு சீற்றம் தாங்க முடியவில்லை. கைகளை முஷ்டித்து மேஜைமேல் ஊன்றிக் கொண்டாள். "அவர் தம்பிதான். நீங்கள் அண்ணா, அண்ணாவிலும் அண்ணா. முத்தண்ணா..."விடுவிடென்று உள்ளே சென்றாள். எனக்கு மஞ்சள் பித்தமாய் நெஞ்சுதான் கசந்தது. இருந்தும் நான் என்ன செய்ய முடியும்? பாச்சாவோடு சிண்டைப் பிடித்துக் கொள்வதா? அவன் பிச்சையை வாங்கிக் கொள்வதா மறுப்பதா? இருந்தும் அவன் என் க-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/175&oldid=764354" இலிருந்து மீள்விக்கப்பட்டது