பக்கம்:கங்கா.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●fr, 字。『リ 16% எப்பவுமே பாசம் கொஞ்சம் கூடத்தான். எனக்கும் அப்பா மேல் அப்படித்தான். "ராமா, எனக்கு சொத்து இல்லை. என் செல்வங்கள் எல்லாம் என் குழந்தைகள்தான். எதுவோ என்னால் முடிந்தது. உங்கள் தலையில் கடன், பொறுப்பு என்று: சுமத்தாமம் போய்விட்டால் அதுவேதான் இந்த ஜென்மத்தில் என்னால் முடிந்த மகத்தான காரியம்.” அப்பா கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியார். சின்ன வயதில், முன்னுக்கு வரவேண்டிய சமயத்தில் நோய் வாய்ப்பட்டு சறுகி விட்டார். அவர் நோயால் படும் வேதனையைக் கண்டு நான் சபதம் பண்ணிக் கொண்ட விளைவாய்த்தான் டாக்டருக்குப் படித்தேன். அதனால் என்ன படித்து முதலில் தேறிவிட்டால் மாத்திரம் போதுமா அதிருஷ்டம் வேண்டாமா ? அம்பாளின் அருள் வேண்டாமா ?” - எனக்கு நேர் எதிரிடை பாச்சா வகுப்புக்கு வகுப்பு பல்டி, வத்தியார் பிள்ளை மக்கு என்ற வசனத்தைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக் கொண்டாயாடா என்று அப்பா நொந்து கொள்வார். பரிகூைடி வேளைக்குப் பட்டை பட்டையாய் விபூதி இட்டுக் கொண்டு பயபக்தி யாய் எேஷ்டி மேல் இடுப்பில் துண்டை முடிந்து கொண்டுகோவிலுக்குப் போய் தூணுக்குத் துரண் சுற்றி வருவான பிரயோஜனம் ? பாச்ாவுக்கு வீட்டுப் பொம்மனாட்குகளிடம் நல்ல பேர், உலக விவாரம் ரொம்பவும் தெரிந்தவன் என்று. அவன் (பாய் வாங்கிவரும் சாமான்கள் எப்பவுமே தரத் திலும் அளவிலும் உயர்ந்து விலையும் குறைந்திருக்கும். ஒரு தடவை என் அத்தை என்னை அடுப்பில் குழம்பு. காயறது என்று அவசரமாய் உப்பு வாங்க அனுப்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/183&oldid=764363" இலிருந்து மீள்விக்கப்பட்டது