பக்கம்:கங்கா.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

கங்கா


அத்தை எப்பவுமே கொஞ்சம் கோபக்காரி, அவளைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் பயந்தான். அத்தை பெண் பாரு, அம்மா வரத்தைத் தான் வாங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த நாளிலிருந்தே நான் புத்தகப் புழு படித்துக் கொண்டே தெருவில் நெருப்புக் கோழி போல் வளைந்து வளைந்து நடந்து சென்றேன். அதன் ஆபத்தைப் பற்றி அப்பா எத்தனையோ முறை எச்சரிக்கை பண்ணி, அடித்துமிருக்கிறார்; ஆனால் சமயத்தில் எனக்கு மறந்து விடும். "உப்புக் கேக்கறையே ஏனம் கொண்டு வந்திருக் கையா?" என்று கடைக்காரன் கேட்டான். நான் திரு திருவென விழித்தேன். மறந்து விட்டேன். அப்போ தான் நினைவு வந்தது. நான் கடைக்கு எடுத்துப் போக அடுக்கை அத்தை அடுப்பின் அவசரத்தில், விசுப் பலகை மேல் னக்" என்று வைத்து விட்டுப் போன சப்தம். "பிடிசாமி மடியை தொலையாத பேரம் பண்ண வந்துரட்டே ' என்று கடைக்காரன் எரிச்சலுடன் கத்தி னான். அவனுக்கு பேர நெருக்கடி. பேசாமல் மடியில் வாங்கிக் கட்டிக் கொண்டேன். போகிற வழியெல்லாம் படித்துக் கொண்டே சென்றேன். அத்தை வாசலில் w ش، به سع 效 షీ < *- ماه اسم اشته * α く。 கோபத்துடன் தாத்திருந்தன். ూG காரியத்துக்கு அனுப்பிச்சால் எத்தனை நாழி ? எங்கேடா உப்பு ?" மடியை அவிழ்த்துக் கொட்டினேன். நாது உப்புக் கற்களும், ஒரு வற்றல் மிளகாய்க் காம்ம் கீழே விழுந்தன. திரு திருவென விழித்தேன். .ொல்லவும் வேண்டுமா ? மடியை சரியாய்க் கட்டவில்லை. திரும்பி வந்த வழியெல்லாம் கதை சுவாரஸ்யம். அத்தை ஓவென இரைந்தாள். "93 உப்புவாங்கத் துப்பு இல்லை. உலகத்தில் நீ எப்படித்தான் பிழைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/184&oldid=1283364" இலிருந்து மீள்விக்கப்பட்டது