பக்கம்:கங்கா.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3m)許。 学・原丁置。 17; போறாயோ? உனக்கு என் பெண்ணை வேறே கொடுக் கணும்னு இருக்கேன்-” விஷயங்களில் அவ்வளவு பெருமை வாய்ந்தவன் நான். அப்பாகூட அடிக்கடி சொல்வார். "ராமா, முழிச்சுக்கோடா. கண்ணைத் திறந்து சுற்று முற்றும் 钴g”并。” அப்பா சொற்படி விழித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நிலக் குத்தகைக்காரன் ஊரெல்லாம் பொன்னாய் விளைந்தாலும் மாசூலை நாலு வருஷமாய் அளக்க வில்லை ஆனால் அவர் வாசல் வழியாய் செல்ல நேர்ந் தால் திண்ணையிலிருந்து அவசர அவசரமாய் எழுந்து கும்பிடு பலம், "நாளைக்குக் கொடுக்கிறேன் சார்” என்று கை மாற் நாய்க் கடன் வாங்கிப் போனவர் நாலு மாதங்களாயும் அதைப் பற்றி மாத்திரம் பேசமாட்டேன் என்கிறார்: எனக்குப் பேச்செடுக்க லஜ்ஜையாயிருக்கிறது. நாளடை வில் பயமாயிருக்கிறது. அவர் மற்றதெல்லாம் அடித்துப் பேசுகிறார். என்னுடன் ஒண்டிக் குடித்தனம் இருப்பவர், "என்னதானிருந்தாலும் லார் நீங்கள், ரொம்ப soft. அதான் வழியில் போகிறவன் வரவன் எல்லாம் தலையில் கல்லரைத்து விட்டுப் போகிறான்கள்” என்கிறார். ஆனால் அவர் எனக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. அப்பா இறந்து போன இரண்டு மாதங்களுக்கெல் லாம் பாச்சா ஒருநாள் என்னிடம் வந்தான், "அண்ணா, எனக்கோ சுட்டுப் போட்டாலும் படிப்பு வரவில்லை. நான் எங்கேயாவது வெளியூரைப் பார்க்கப் பிழைக்கப் போகிறேன். எனக்கு ஒரு முன்னூறு ரூபாய் இருந்தால் கொடேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/185&oldid=764365" இலிருந்து மீள்விக்கப்பட்டது