பக்கம்:கங்கா.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

175


தொங்கிற்று. அவளுக்கு அப்புறம் பேச்சு எழவில்லை. கரகரவென என்னைக் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் அறை விளக்கைப் போட்டாள். எலி வால்போல் வளைந்த ஒரு குடைக்கம்பிப் பூட்டு சந்திலிருந்து தொங்கிற்று. என் கண்னெதிரில் ஒரு கேள்வி சிறகடித்து மறைந்தது. பாச்சா இப்போ எங்கி ருப்பான்? ஜோலார்ப்பேட்டை தாண்டியிருப்பானா ? K. ரு ஐந்தாறு வருடங்களுக்கும் பாச்சா இருக்கும் క్షష్టి(క్స్ : 。豪 تميمية " تنمية. பொறிகூடத் தெரியவில்லை. இதற்குள் என் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. நான் மூலையில் சார்த்தின ஏணியாய்த்தானிருக்கிறேன்: ஒருநான் வாசலறையில் வழக்கம்போல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். பாரு முரளியை இடுப்பில் வைத்துக் கொண்டு வழக்கம் போல ஏதோ உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தாள், ஒரு டாக்ஸி டி'க்காய் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து பாச்சா ஜம்'மென்று இறங்கினான். பின்னா லேயே ஒரு ஸ்திரீயும் இறங்கினாள். "என்னண்ணா, செளக்கியமா? செல்லா, நமஸ்காரம் பண்ணு. இதாண்டி என் அண்ணா, மின்னி " "இருங்கோ-இருங்கோ உள்ளே வராதேங்கோ-" பாரு அவசர அவசரமாய் உள்ளே போய் ஆரத்தி கரைத்து வந்து சுற்றிக் கொட்டினான். நான் பாருவை ஒரக்கண்ணால் கவனித்துக்கொண்டே நின்றேன். அவள் முகத்திலிருந்து திடீரென பத்து வருடங் கள் உதிர்ந்திருந்தன. பாரு இவ்வளவு அழகாவாயிருக் கிறாள் எனக்கெப்படி இதுவரை தெரியாமல் போயிற்று? உள்ளூரச் சிரிப்பாய்க்கூட இருந்தது. பாவம், தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/189&oldid=1283368" இலிருந்து மீள்விக்கப்பட்டது