பக்கம்:கங்கா.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

177


முகம்தானா ? பத்து வருடங்களுக்கு முன்னால் பாரு இப்ப டியா இருந்தாள்? துள்ளிவிளையாடும் கன்றாய் வந்தாள். அவள் அகமுடையான் டாக்டருக்குப் படிக்கிறான் என்ற பெருமையில் என்னென்ன ஆசை வைத்திருந்தாளோ ! ஆனால் அவள் கண்டது என்ன ? குடும்ப வாழ்க்கையில் ஈடுகொடுத்து, குழந்தைகள் விளைந்து விளைந்து, வயிறு சரிந்து கூந்தல் கொட்டி, அழகு அழிந்து, கடுகடுத்து துயரந்தாங்கும் பசுவாய் மாறிவிட்டாள். சில சமயங்களில் கஷ்டம் தாங்காமல் சிலும்பி சீறிப் பார்க்கிறாள், பசு மிரள்வதுபோல். அதனால் சுமையிறங்கிவிடுமா ? இன் னும் அதிகமாய்த்தான் அழுத்துகிறது. ஆமாம் இந்த நிலைகளுக்கு விமோசனமேயில்லையா? அடித்தால் நோகிறதே என்று வலி பொறுக்காமல் அழுதால் இந்த உலகத்திற்கு அணியாயமாய்ப்படுகிறது: அதைவிடத் தப்பு, அது பண்பு குறைவு. எனக்கு என் சுமைபோல் வந்திருப்பவனுக்கு அவன் சுமை. வந்திருப் பவன் விவரித்துக் கொண்டிருக்கும் காட்சி என் முன் எழு கிறது. கன்றுத் தோல்கூட செத்தும் அவதியுறும் பொரு ளாய்த்தான் தெரிகிறது. நாயின் வெறியில்கூட நிறைவு பெறாத ஒரு சோகம்தான் தெரிகிறது. இவைகளில் எதன் சோகம் அதிகம்? நாயா, கன்றா, தோலா, மெளனமாய்க் கண்ணிர் வடிக்கும் பசுவா ? இச் சோகங்களைத் தாண்டி, பாற் பீறல்கள், குவளை யுள் எழும்பிக் கொண்டிருக்கும் நுரைமேல் மெத்து மெத் தென வீழ்கின்றன. இந்த சுகத்தின் தன்மை என்ன? அதையும் தாண்டி, இந்த சோகத்திற்கும் சுகத்திற்கும் காரணனாய் இரண்டையும் பால்காரன் கறந்து கொண் டிருக்கிறான். அவனுடைய சூட்சுமம்தான் என்ன ? சோகத்திலிருந்து சுகத்தைக் கறக்கிறானா ? சுகத்தினால் சோகத்தைப் பெருக்குகிறானா ? அல்லது இரண்டுமே அவனுக்கு அக்கறையில்லையோ ? பால்காரன்தான் உண்மையோ ? என் யோசனைகள் முரட்டுத்தனமாய்க் கலைந்தன. என் தோள்களை யாரோ பலமாய்க் குலுக்கிக் கொண் க-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/191&oldid=1283370" இலிருந்து மீள்விக்கப்பட்டது