பக்கம்:கங்கா.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

கங்கா


டிருந்தார்கள். நான் விழித்துக்கொண்டேன். வந்திருந் தவன் படுக்கையிலிருந்து தாவி எழுந்து என்மேல் பாய்ந்து என்னைக் கட்டிக்கொண்டிருந்தான். அவன் கறுப்பு விழிகள் வெள்ளை விழிகளில் சுழன்றன. -"அப்போது டாக்டர், திடீரென்று அந்தக் கன்றுத் தோல் தாவிக் குதித்து எழுந்தது. இதை நான் என் கண்ணால் கண்டேன். அது பின்னங் கால்களால் விட்ட உதையில் நாய் ஊளையிட்டுக்கொண்டு கீழே உருண்டது. கன்றின் தொடையிலிருந்து ரத்தம் கொட்டிற்று. "அரே ரே !! ரே !!! ரே !!! பால்காரன் மூஞ்சி யைப் பார்க்கணுமே : குவளையைக் கீழே வைத்துவிட்டுத் திரும்பினான். வாங்கின உதையில் அம்மாடி என்று அப்படியே அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு குப்புற விழுந்தான் தோலின் வாயிலிருந்து வந்த குரல் கன்றின் குரலாயில்லை. அந்த அமானுஷ்யமான வீறலில் ரத்தம் சில்லிட்டது. உயிர் பிரியும் குரலும் உயிர் பெறும் குரலும் ஒன்றுதானா ? கொம்புக் கால்கள் மேல் தத்தித் தத்தி இருமுறை தன்னைத்தானே சுற்றி வந்து, தோல் பொத் தெனக் கீழே விழுந்தது. "பால் குவளை உருண்டது. தோலின் தொடையி லிருந்து ரத்தமாய்க் கொட்டிற்று. குவளையிலிருந்து கிளம்பிய பால் பெருக்கோடு கலந்தது. நான் கீழே விழுந்து விட்டேன். அப்புறம் எனக்கு நினைவில்லை.” “டாக்டர், டாக்டர், நான் கண்டது நிஜமா ?” அவன் அனல் மூச்சு என் முகத்தை எரித்தது. அவன் காந்தம் என்னுள்ளும் பாய்கையில் எனக்குத் தலை *கிர்ர்ர்"ரிட்டது. வெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போய்விடும் போலிருந்தது. மண்டையை இருகைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் எனக்கே புதியவையாயிருந்தன. "இல்லை என்று எப்படிச் சொல்வது ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/192&oldid=1283371" இலிருந்து மீள்விக்கப்பட்டது