பக்கம்:கங்கா.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@瘤。夺。狐f。 ł85. கதிராயும், உருவியும், இறைந்தும், உதிர்ந்தும் கிடக் கின்றன எந்த ஆத்திரத்தில் ஆண்டவன் வானத்தைச் சூறையிட்டிருக்கிறான் ? கடவுள் என்கிறோம், அவனு: டைய கசந்த ஆசைகள் என்னென்னவோ ? இத்தனை நட்சத்திரங்களைக் கண்டுவிட்டதால் மனம் மகிழ்ச்சி யடைந்து விடவில்லை. திண்ணையில் குழந்தைகள் தூக்கத்தில் உருள். கின்றன. அவர்களுடன் அமலி, விமலி. இன்னும் நாலு: பேர் படுத்தாலும் இடம் கொடுக்கும். கடல் போலத் திண்ணை. குஞ்சுத் திண்ணையில் கமலி-இல்லை, அவளிடத்தில் கமலியைக் காணோம். சற்று நேரம் காத்திருக்கிறேன். அப்பவும் காணோமே : எழுந்து கோவில் கதவுபோலக் கனத்த வாசற்கதவை மெதுவாய்த் தள்ளி வழி நடையுள் வந்து எட்டிப் பார்க்கிறேன். மொக்கு மலர்ந்தாற்போல் மிருதுவான வெளிச்சத்தில் கூடம் குளிர்ந்திருக்கிறது. அம்மாவின் படத்துக்கு எதிரே, பெரிய குத்து விளக்கில்-அதன் உயரம் என் இடுப்புக்கு மேல்-சுடர் ஸ்தம்பித்து நிற்கிறது. அதைத் தனக்குக் குறியாய்க் கொண்டது போல் கமலி அசைவற்று நிற்கிறாள். படத்தில் அம்மாவின் கண்களில் கருணை தெரிய வில்லை. படத்தில் எந்தச் சமயமும் சிரித்த முகத்தில் சீற்றம் சிந்துகிறது. படத்தடியில் மூன்று கிண்ணங்கள். நான் ஒசைப்படாமல் நழுவி மறுபடியும் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன். வானத்தின் சீறல் ஏன் என்று இப்போது தெரிகிறது, ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/199&oldid=764380" இலிருந்து மீள்விக்கப்பட்டது