பக்கம்:கங்கா.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 ö韶岛赠” அமலியும், விமலியும், கமலி கல்லாக உறைந்திருப் பதைத்தான் கண்டிக்கிறார்கள். அத்தனைக்கத்தனை அவள் இருந்த கலகலப்பை அவர்கள் எப்படி அறிவார் கள் ? அவர்கள் வருமுன்னரே அவள் பேச்சு அடங்கி விட்டது. வைராக்கியம் அற்ப விஷயத்திலிருந்துதான் பிறக்கின்றது. கமலியின் வைராக்கியத்திற்குக் காரணம் என் கிண்ணங்கள்தாம். சீதத்தில் பதித்த பண்டம்போல், மேலி தன் வைராக்கியத்தின் கவசத்தில், வயதில் சிதை யாமல் உருத்திகழ்கின்றாள். கமலி, அமலி, விமலி மூவரும் சேர்ந்து வெளியே சென்றால் தாயும் பெண்களும் என்று எவர் நினைப்பர்? ஆனால் கமலி வாசற்படி தாண்டிப் பத்து வருடங் களாகின்றன, கமலி தபஸ்வினி. எனக்குச் சில சமயங்கள் தோன்றுவதுண்டு. அண்டா வைச் சொம்பால் நிரப்புவது போன்று, கமலி தன் தவத்தை, தான் அவ்வளவு கடுமையாய் காக்கும் தன் வீம்பை, நாளுக்கு நாள், வருடா வருடம் ஏதோ ஒரு முறையில், பெண்களுக்கு இரண்டைக் கொடுத்துவிட்டுத் தனக்கு மீத்திக் கொண்டிருக்கும் கிண்ணத்தால் அளந்து அளந்து, தனக்குப் பெருக்கிக் கொள்கிறாளோ ? மறுபடியும் இக் கிண்ணங்கள் தாம் வருகின்றன. அம்மா, கமலி, நான், எங்கள் மூவரின் விதிப்பயனை, அவரவர்க்கு அவரவர் வீதமாய் அளந்துவிட்ட கிண்ணங் கள் ஒன்று: ஒன்றின் தலையில் சுழித்துவிட்டால் ஒன்பது, வாழ்க்கை எப்படித் தன் அர்த்தமிகையினாலேயே, அர்த்த மற்றும் இருக்கின்றது ! ஆமோதிப்பில் ஒரு நட்சத்திரம் உதிர்கின்றது. ஊமை உகுத்த கண்ணிர். 演

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/200&oldid=764382" இலிருந்து மீள்விக்கப்பட்டது