பக்கம்:கங்கா.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

187


அம்மா, உன் கோபம் தணிவாயா ? உள்ளே கமலி உன்னோடு வாதாடிக் கொண்டிருக் கிறாள். - எனக்கும் வயதாகிவிட்டது. நீயே சொல்லியிருக் கிறாய். "இந்த வீட்டிலேயே ஆண்களுக்கு ஆயுசு கட்டை, "முணுக் கென்றால் மளுக்," என்னைச் சொல்லிவிட்டு நீ முறிந்துவிட்டாய். ஆனால் அதற்கு முதற் காரணம் நான்தான்.முதலில் என்னை மன்னி, பிறகு எங்களை மன்னி. நீ உயிரோடி ருக்கையிலேயே எங்களை மன்னிக்காமலே போய்விட்ட தற்காக உன்னையே மன்னித்துக் கொள். சீறாதே. என் வேண்டுதலுக்கிரங்கி வானம் கலக்கம் கொள் கிறதோ? நட்சத்திரங்கள் ஒரு முறை மங்கி மறுபடியும் வீங்குகின்றன. வானம் தன் நெற்றியில் மன்னிப்பில் இட்டுக் கொண்ட உதிரி விபூதிபோல், பிசுபிசுவென்று சிறியதொரு வெண்மேகம் திடீரென எங்கிருந்தோ தோன்றுகிறது. 寶 கொட்டு மேளத்தின் கெட்டி முழக்கத்தினிடையே, "வலது காலை முன்னால் வைத்துப் படியை மிதி,” என்று அம்மா சொல்லிக்கொடுத்து மருமகள் வீட்டுள் நுழைந்து மாமியாரை நமஸ்கரித்ததும், அம்மா ஆசீர்வாதம் பண்ணியது இன்றுபோல் கேட்கிறது. "எனக்குப் பெண் இல்லாக் குறையைத் தீர்த்து வைக்க வந்தாயா குழந்தை 1’ என்று சொல்லி அம்மா கமலியைக் கட்டிக்கொண்டாள். அப்போது என் கன்னங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/201&oldid=1283376" இலிருந்து மீள்விக்கப்பட்டது