பக்கம்:கங்கா.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剑》而”。母。卯· #89 அப்பட்டமான உண்மையோ உணர்ச்சியோ அதன் உக்கிரத்தில் வெளிப்படுகையில் அது வெளிப்பிடும் சொல் லின் உருக்குறைவால் பொய்யெனத்தான் படுமோ ? பிறகு இன்னொரு சமயம். "உங்களை எனக்கு முன்னாலேயே தெரியும்" என்றாள். அவளிடமிருந்து ஏதோ ஒரு மணம்-தாழம்பூ ఇణL யல்ல, இளமையின் கமழ்ச்சி - மண்டையைக் கிறு கிறுத்தது. "ஒரு நாள் நானும் அம்மாவும் கடற்கரைக்கு வந்தி ஆருந்தோம்.” . "அதோ பார் அந்த நாலு கலர்ச் சொக்காய்களுக்கு நடுவில் ஒரு வெள்ளை ஜிப்பா, அந்த பிள்ளையாண்டான் ஜாதகத்தைத்தான் இன்று வாங்கி வந்திருக்கிறேன். கடவுள் யத்தனம் எப்படியோ?” என்று அம்மா பெருமூச் செறிந்தாள். அம்மாவின் கவலை அம்மாவுக்குத் தெரியும். பெண் மதமதவென வளர்ந்து விட்டாளே ! "அவருக்கே என்னைப் பண்ணி வைத்துவிடு அம்மா!' என்றேன். ஏன் அப்படிச் சொன்னேன்? எனக்குத் தெரியாது. அம்மாவுக்கிரங்கியா? உங்கள் முதுகுக்கு மயங்கியா ? அப்பவும் உங்கள் முதுகைத்தான் கண்டேன் முகம் காணவில்லை. அல்ல பின்நேரப் போவதன் முன்வாக்கா ? “என்னைப் பெண் பார்க்க வந்த முதல் வரனும் கடைசி வரனும் நீங்களேதான். நாலுபேருக்கு நமஸ் கரித்து எழுந்து அவர்கள் வெறிக்க வெறிக்க அவர்கள் எதிரே நின்று அவர்கள் கண்பட்ட எச்சிலாய் நான் இல்லை." அவள் மூச்சு என் முகத்தை எரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/203&oldid=764385" இலிருந்து மீள்விக்கப்பட்டது