பக்கம்:கங்கா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

19


"ஒவ் - என்றாள் முயற்சியுடன், ஜலத்தை இழுத் துக் கொண்டே.

  • கங்கா ! என்றேன் மறுபடியும், ஆனால் அதற்கு மேல் ஓடவில்லை. என்மேல் ஆயிரம் நட்டுவாக்களிகள் ஊர்ந்தன, "கங்கா !”

திரும்பி, ஆச்சரியத்துடன் என்னை நோக்கினாள். அந்தப் பார்வையிலேயே என் தைரியம் அத்தனையும் கரைந்து போயிற்று. என்ன முனகினேன் என்று எனக்கே காது கேட்கவில்லை. கங்கா, கிணற்றின் பிடிச்சுவரினின்று குடத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டாள். சிரித்துக்கொண்டே, "கங்கா, யமுனா, பாகீரதி, நர்மதா, சரஸ்வதி !" என்று பாட்டாய் பாடிக் கொண்டே இடுப்பை ஒடித்து ஒடித்து நடந்து வீட்டுள் சென்றாள்.

  • கிர் ரென்றது. தலையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டேன். பாக்கு மரங் களிலும் தென்னங் கன்றுகளிலிருந்தும் பறவைகள் கர் கர்’ எனச் சத்தமிட்டு கேலி செய்தன. மரங்களின் பின்னா லிருந்து இரண்டு நக்ஷத்திரங்கள் என்ன சமாசாரம்? என எட்டிப் பார்த்து ஏளனமாய்க் கண்ணைச் சிமிட்டின.

ஆனால் இந்த அவஸ்தையை நான் இதற்கு மேலும் படுவது தருமத்திற்கே சகிக்கவில்லை. காலேஜில் சேரும் விஷயமாய் உடனே புறப்படும்படி மறுநாள் அப்பாவிட மிருந்து தந்தி வந்தது. நான் அன்று சாயந்திரமே கிளம்பும்படி ஆயிற்று. வாசலில் வண்டி வந்துநின்றதும் என்னை வழியனுப்ப அத்தனை பேரும் கூடினர். கங்கா சிரித்துக் கொண்டே, "வர வருஷமும் வரணும் கேட்டையா? நான் இங்கேதான் இருப்பேன்," என்றாள். அவளைக் கண்னெடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/33&oldid=1283268" இலிருந்து மீள்விக்கப்பட்டது