பக்கம்:கங்கா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தாள். அவள் திட்டத் திட்ட இன்று அலாதி இன்ப மாயிருந்தது. சாப்பிட்டு எழுந்ததும் தூங்கிக் கொண்டிருந்த. குழந்தையை எழுப்பிக் கொஞ்சினேன். என்னைத் திட்டிக் கொண்டே எச்சில் இலையை எடுத்து வாசலில் எறிந்து விட்டு, திட்டிக் கொண்டே திரும்பி வந்தாள். அப்புறம் என்னால் அடக்க முடியவில்லை. - "சாலா இங்கே வா !” ,.. வந்தாள். கையைப் பிடித்தேன்.) "திட்டு, திட்டு, என்னை இன்னும் திட்டு” என்றேன், அவள் பயந்து போய் சற்றுப் பின் வாங்கினாள். அதைக் காண்கையில் பள்ளிக்கூடச் சிறுவன் போல் எனக்குச் சிரிப்பு பீறிட்டது. "சாலா. நீ என்னைத் திட்டத் திட்ட எனக்கு நீ' நிஜமாகிக் கொண்டு வருகிறாய். எப்பொழுது நிஜமா" கிறாயோ அப்பொழுது நீதான் நிச்சயம், எப்போ நிச்ச யமோ நீதான் என் தைரியம்.* "சரிதான் கையை விடுங்கோ . யாருக்குப் புரிகிறது உங்கள் சிக்கப் பேச்சும், சிங்காரப் பேச்சும்? கையை விட்டுட்டுக் கையை அலம்புங்கோ எச்சில்...கையை விடுங் கோன்னா "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/39&oldid=1280343" இலிருந்து மீள்விக்கப்பட்டது