பக்கம்:கங்கா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

27


வாய் வெற்றிலைச் சிவப்பு. கன்னத்திலும் உதம் டிலும், அவன் தாயின் பால் இன்னமும் வழிந்தது. அவன் கண்கள்...அவை எதையோ தேடி அலைந்தன. கனவுகள் உலவும் கண்கள். பஞ்சவடி, பிருந்தாவனம், மானஸ்ாதீரம். ஆம் அவன் ஒரு கவிஞன். (அல்ல பைத்தியம்) இடையில் எழுத்தாணி. அவன் பாட்ட னுடையது...எங்கேயோபார்த்தபடி என்னவோ யோசனை பண்ணியபடி வருகையில், திடீரென்று அவளைக் கண் டான்.சட்டென நின்றான்.அவனை ஒரு புதர் மறைத்தது. அதனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. அவள் உடல், உள்ளம் எல்லாம், வெள்ளத்தின் வசம் திளைத்தது. புனலின் குளிர்ச்சி உடலில் ஊறும் களி வெறியில், தண்ணிரைக் கையால் அடித்துத் திவலைத்திரை எழுப்பி, அதன் பின் மறைந்து. கட கட கக்கடவென சிரித்து அப்படியே ஜலத்தில் மல்லாந்தாள். அவள் மயிர் அவிழ்ந்து, தோகை விரிந்து, பிறகு கனத்து அமிழ்ந்தது. கைகளை விரித்து, கால்களைச் சேர்த்து, சிலுவைபோல் மிதந்தாள். வெயிலின் வெப்பம் கண்கள் கூசி இமைக்கத் தவித்தன. வாய் சிரித்தது. உடல் கரும் பளிங்கென ஒளிவீசிற்று. அவன் அவளிடம் லயித்தான். இடையில் சொருகிய எழுத்தாணி அவனே யறியாது கையில் ஏறியது. ஒலை ? இல்லை. ஆனால், அதோ முட்களிடையில் ஓர் ஆலிலை...சட்டென அதையெடுத்து, அங்கேயே மண்டியிட்டுத் தொடைமீது வைத்து, எழுத ஆரம்பித் தான். தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை உருவாக்க முயன்றான். அவன் கவிஞன். (அல்ல பைத்தியம்) அவன் கண்கள், கனவு காணும் கண்கள். அக்கனவுகளில், அக்கடும் வெயிலே, நள்ளிரவின் வெண்ணிலவாய் மாறிவிடும்; இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/41&oldid=1283272" இலிருந்து மீள்விக்கப்பட்டது