பக்கம்:கங்கா.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

35


ஆனால் குச்சி அகப்படவில்லை. மண் குவியலையும் அதன் சுற்றுப்புறங்களையும் சல்லடை போட்டு சலித்துப் பார்த்தாயிற்று. ஊ-ஹாம், கிடைக்கவில்லை. ஆனால், இதற்காக ஏன் தங்களுக்குத் திடீரெனக் கொஞ்சம்கூட அவசியம் ஏன், நியாயம்கூட இல்லாத இவ்வளவு பரபரப்பு, திகில் ?

  • இது விளையாட்டு. கெட்டுப்போனது மாணிக்கம், வைரம் இல்லை” என்று ஒரு முறைக்கு இருமுறையாய் நான் ஞாபகமூட்டியும், நீங்கள் தேறவில்லை. அன்றுதான் எனக்கு நினைவு தெரிந்து, உங்கள் அன்புக் குரல் சற்று தடித்தது.

நான் விளையாடவே இல்லை, உன்னை நான் விளை பாடவே அழைக்கவில்லை. விளையாட்டு என்கிற வார்த்தையே என் வாயில் வரவில்லை. சரியாய் நினைவு படுத்திக் கொள். எனக்கு விளையாட்டே கிடையாது. மாணிக்கமும் வைரமும் எனக்கேதுக்கு ? அவரவர்க்க அவரவர் மதிப்பு. ஒளித்த பொருள் மாணிக்கமோ வைரமோ, வெறும் நெருப்புக் குச்சியோ-காணோம் என்றால் என்ன அர்த்தம்? அதைக் கண்டுபிடிக்க முடியா விட்டால், அது இல்லை என்று அர்த்தமா ?” எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "இல்லை, அதற்குக் காலும் கையும் முளைத்து, தானே ஒளிந்துகொண்டது என்று அர்த்தம்” என்றேன். உங்கள் முகம் சட்டென மாறியதைக் கண்டதும்தான் நான் இழைத்த அவமரியாதை புரிந்தது. "வாய்க் கொழுப்பை மன்னித்துவிடுங்கள்” என்று உங்கள் பாதங் களில் என் தலையை வைக்கக் குனிந்தேன். ஆனால் நீங்கள் தடுத்துவிட்டீர்கள். உங்கள் பார்வை, எனக்குப் பின்னால், தன் நிழல்கூட படாது நின்று, உங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/49&oldid=1283277" இலிருந்து மீள்விக்கப்பட்டது