பக்கம்:கங்கா.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ణీ క్షీ கங்கள் அழகு என்பதே என்ன ? விழி, நிறம், உடல் அங்க அமைப்புகளின் எடுப்பா ? அல்லது; அன்பு, தயை, ஆண்மை, சாந்தம், கருணை: இவை போன்ற உயர்ந்த குண விசேஷங்களின் வெளித் தோற்றத்தின் சிறப்பா ? அல்லது: இரண்டுமா ? சத்தியம்-? சத்தியத்தைக் கண்டவர் யார்? கண்டவர் சொன்னவர் யார் ? ஆனால் இப்பொழுது உங்களிடமிருந்து வெளிப்படும் உள்ளொளியைத்தான் அழகாய்க் காண்கிறேன். இந்த அழகை உங்கள் முகத்தில் காண்கிறேனோ? அதன் இனிமையிலா ? அல்லது உங்கள் மெளனத்திலா? தெரிய வில்லை. இவையெல்லாவற்றையும் மீறி அது பிரகாசிக் கின்றது. அது உங்களிடத்தில் இல்லை, இனி நீங்களே

  • - & .بلابلاتس Eಃ

அதில்தான் இருக்கிறீர்கள். உங்கள் உடற் கண்களி லிருந்தே புறப்பட்டு உங்கள் காலடி ஆதாரத்தையே அது வெட்டியாகிவிட்டது. எதிலோ மாட்டிக்கொண்டு அதில் மூழ்கிக் கொண்டி ருக்கிறீர்கள். அதிலிருந்து தப்ப உங்களுக்கு இனி வழி வில்லை. நான் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பயமாயிருக்கிறது. ஆனால் உங்கள் முகத்தில் கொஞ்சமும் பயமில்லை. துளிக்கூட துக்கமில்லை. சந்தோஷமில்லை. ஏதோ ஒரு தெளிவுதான் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/58&oldid=764437" இலிருந்து மீள்விக்கப்பட்டது