பக்கம்:கங்கா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鴿 ஆனால் விடமாட்டார். "திருப்பிச் சொல்லு, எங்கே திருப்பிச் சொல்லு!” அப்படியே ஒப்பிப்பேன். பிறகு கொஞ்ச நாள் கழித்து, திடீரென, TET6, ராமாபரம் நினைவிருக்குதா?" என்று அதட்டுவார். நான் பயந்து, தலையை ஆட்டுவேன். ஆனால் விளக்கமாட்டார். அவர் பக்திமானும் இல்லை. ஒழிந்த வேளைக்கு கோர்ட்டில் சாகூஜி சொல்வது தான் அவர் பிழைப்பு. ஆனால் அவர் சொன்ன சூத்ரம் இன்னும் என்னைச் சீண்டிக் கொண்டிருக்கிறது. புரியப் புரிய அதன் சீண்டல் அதிகரிக்கின்றது. 宽 என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் "கோவில் மாடு” என்று பெயர் வைத்திருக்கிறார், "ஓ ராமாமிருதமா, சரிதான். எழுதிக்கொண்டேயிருப் பார், சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப் பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர்பாட்டுக்குப் போய்க் கொண்டேயிருப்பார். இஷ்டத் துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்கவேண்டும்.பிறகு நாளோ, மாதமோ, வருடமோ, தடைப்பட்ட சொல் தட்டிய பின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு கோவில் மாடு! இப்படியே இவர் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்!! எனக்கு உவகை பொங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/6&oldid=764439" இலிருந்து மீள்விக்கப்பட்டது