பக்கம்:கங்கா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேஷத்ரம் தங்களையலாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். நேற்று என் கனவில் வந்தீர்கள். வினோதமான கனா. சமுத்திரக் கரையோரமாய், அவசர அவசரமாய்ப் பூமியைத் தோண்டுகிறேன். ஆழ மாய்த் தோண்டுகிறேன். கிட்டத்தட்ட ஒரு ஆள் உயரத்திற்குத் தோண்டிய பிறகு ஒரு பெட்டி கைக்குத் தட்டுகிறது. அதை ஒரு கருநாகம் அனைத்துக் கொண்டிருக்கிறது. என்னைக் கண்டதும் மேலே ஏறிவருகிறது. வந்ததும் அதைக் கடலிலிருந்து ஒரு அலைமோதி வந்து தன்னுடன் இழுத்துச் சென்றுவிட்டது. முக்கி முனகி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு பள்ளத்திலிருந்து மேலேறுகிறேன். விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள. உங்கள் உடலில் முன்னிலும் தகதகப்பு ஏறியிருக்கிறது. புன்னகை புரிகிறீர்கள். "ஆத்மா, என்ன பண்ணுகிறாய் !” "கண்டு பிடித்துவிட்டேன் ஸ்வாமி !”

  • ణ్ణ **

எனக்கு மூச்சுத் திணறுகிறது. தலை வயிற்றுள் புதைந்துவிடும்போல் கனம் அழுத்துகிறது. “ஒரு கை கொடுங்களேன். ” நீங்கள் கை கொடுக்கவில்லை. என் பேச்சு காதில் விழாததுபோல் வெறுமே என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள். அதை நானே கீழேயிறக்குகிறேன். கனம் இழிந்ததும், தலை கிர்ர் என்கிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/66&oldid=764446" இலிருந்து மீள்விக்கப்பட்டது