பக்கம்:கங்கா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

53

கனிவுடன் என்னை நோக்குகிறீர்கள். “ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாய் !’ எனக்குப் பெருமிதம் பொங்குகிறது. என் அருகில் வந்து முதுகைத் தட்டிக் கொடுக்கிறீர்கள். ஆனால் உடனேயே உங்களை சந்தேகத்துடன் பார்க்கிறேன். இதென்ன, பங்குக்கு அஸ்திவாரமா ? "ஆத்மா, பெட்டி அகப்பட்டுவிட்டால் போதுமா, அதைத் திறக்க வேண்டாமா ?” பெட்டியைப் பூட்டியிருக்கிறது. அதனால் என்ன ? சுற்று முற்றும் பார்க்கிறேன். பத்தடி தூரத்தில் ஒரு பாராங்கல் கிடக்கிறது. அதைக்கொண்டு பெட்டியை உடைக்க முயல்கிறேன். பெட்டிமேல் கல்லை மோதும் போதெல்லாம் உள்ளிருக்கும் பொருள்கள் இனிய ஓசை யுடன் குலுங்குகின்றன. வேர்வையில் தெப்பமாகி விட்டேன். ஆனால் பெட்டி மூடி இம்மிகூட நகர்ந்து கொடுக்கவில்லை. நீங்களும் எனக்கு உதவி புரியவில்லை. செளகரிய மாய்க் காலை மடித்து மணல்மேல் உட்கார்ந்து கவனித் துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பார்க்க எரிச்ச லாய்க் கூட வருகிறது. ஒரு கைகூட கொடுக்காமல் பங்குக்கு மாத்திரம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக் கிறீர்களா ? "ஆத்மா, உடைக்கவோ வரவில்லை. சாவி எங்கே: தேடு.” நான் உடனே அவசர அவசரமாய் பள்ளத்தில் இறங்கித் தேடுகிறேன். அங்கேயில்லை. சாவியை வேறெங்கே வைத்திருக்கிறதோ ? "ஆத்மா, இந்தப் பெட்டியை உடைக்க முடியாது. சாவி கொண்டுதான் திறக்க முடியும், மெதுவாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/67&oldid=1283288" இலிருந்து மீள்விக்கப்பட்டது