பக்கம்:கங்கா.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கங்கா


லகுவாய், கொஞ்சலாய், ஒரு திருப்பில் திறக்கும் சாவி ! ஒரே சாவி சாவி ! சாவி !! சாவி !!!...... நீங்கள் அப்படிச் சொல்கையில், அப்படியே திறந்து விட்டால், உள்ளிருக்கும் பொருள்களை நினைக்கையில், நாக்கில் ஜலம் ஊறுகிறது. சாவகாசமாய் நீங்கள் எழுகிறீர்கள். "ஆத்மா !” "என்ன ?” "அந்தப் பாம்பு அதில்தான் சாவி " எனக்குப் புரிய வில்லை. அதுதான் சாவியை விழுங்கி விட்டு புதையலுக்குக் காவலாய் இருந்திருக்கிறது." நீங்கள் சொல்வது நியாயமாய், உண்மையாய்ப்படு கிறது. இனி என் செய்வது ? பாம்பைத்தான் அலை அடித்துக்கொண்டு போய்விட்டதே ஏமாந்து போனேன், உடைக்கவும் முடியாது. திறக்கவும் முடியா பெட்டிக்கா இத்தனை காத்திருந்து பாடுபட்டேன் ! பெட்டியை எந்த முட்டாள் எடுத்துக் கொண்டு போனால் என்ன, சாவி என்னிடம்தானே இருக்கிறது என்ற பிரஹஸ்பதியின் கதை நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவன் மெய்யாவே ப்ரஹஸ்பதிதானோ ! நீங்கள் அந்தப் பெட்டியை உங்கள் காலால் எற்றி ஒரு உதை விடுகிறீர்கள். பந்து போல் அது உயர எழும்பி சுழன்று கொண்டேபோய் நடுக்கடலில் விழுகிறது. அது விழுந்த இடத்தில் அலைகள் மலைபோல் விசிறி எழு கின்றன. திரும்பிப் பார்க்கிறேன். நீங்கள் நின்ற இடத்தில் நீங்கள் இல்லை. 责

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/68&oldid=1283289" இலிருந்து மீள்விக்கப்பட்டது