பக்கம்:கங்கா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இன்னொரு எழுத்தாள நண்பருக்கு என்மேல் ஒரு குறை: "என்ன அவர் வெளியுலகத்துக்கே வரமாட்டேன் என்கிறாரே!” எங்களுக்கிடையே இன்னொரு சர்ச்சை: "எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான்?" நான் 'தனக்காக' என்கிறேன். அவர், "பிறருக்காக” என்கிறார். "தனக்காக அவன் எழுதிக் கொள்வதாயிருந்தால் அவன் எழுதவேண்டிய அவசியமே என்ன இருக்கிறது? அப்படியே எழுதினாலும் அவன் தன் பெட்டிக்குள்ளேயே வைத்துக்கொண்டு, அழகு பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாமே!” அவர் பின் கூறியது வாஸ்தவந்தானோ என்றுஎனக்கு தோன்றுகிறது. ஒரோரு கதை, எழுதி முடித்தபிறகு அதை விட்டுப் பிரிய மனம் வருவதில்லை. நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரி லிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகை யிலேயே ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்து தான் போவோம். கருவுற்றதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும் பெற்றது பிரிந்துதான் போகும். யாருக்காக எழுதுகிறேன்? யாருக்காகக் கருவுற்றேன்? இரண்டும் ஒரே கேள்விதான். அந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான். ஆனால் இந்தக் கேள்வி நேர்வதுண்டு: "நானா இதை எழுதினேன்? என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்த பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது?" வாசகனின் வியப்பு இன்னொரு வகையில்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/7&oldid=1294664" இலிருந்து மீள்விக்கப்பட்டது