பக்கம்:கங்கா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

61


இரவுக்கு ஒரு வீட்டுத் திண்ணையில் ஒதுங்கு கிறேன். வாசற் கதவை படைத்தாகி விட்டது. ஆனால் உள்ளே இரைச்சல் கேட்கிறது. "ஒஹ்ஹோ அவ்வளவு தூரம் என்னை எதிர்த்துக் கேட்க ஆயிடுத்தா ? கொஞ்சம் நிதானத்திலேயே இரு: அவன் வரட்டும் சொல்றேன். உன் குதிகால் மண் என்று நினைச்சுண்டிருக்கையா ? நான் பிள்ளையாய்ப் பெற்றுக் கொடுத்தப்பறந்தாண்டி உனக்கு ஆம்படை யான், ஞாபகம் வெச்சுக்கோ "என்னம்மா இது ? யார் இல்லேன்னா ? நான் ஒண்ணுமே சொல்லவில்லையே " "இல்லை, இல்லை இதுக்கு ஒரு வழி பிறந்துதான் ஆகணும். அவன் பாவம், ஊரிலேருந்து வந்தவுடனே தர்க்கம் பண்ணுவானேன்னு விட்டு வெச்சா, நீ அதுக்குள் அவன் மண்டையைத் திறந்து உண்டை ஏத்தி, ஒண்னுக்கொன்பதாய் உபதேசம் பண்ணிடுவே.உன்னைத் தெரியுண்டி நேக்கு நன்னாத் தெரியும் !" இருந்து இருந்து இங்கு வந்து தங்கினோமா ? ஆனால் நேரம் ஆகிவிட்டது. ரொம்பவும் அலுப்பா யிருக்கிறது. திடீரென்று தூக்கம் கண்ணிமைகளை அழுத்துகிறது. சண்டையும் என்னவோ, சட்டென அடங்கிவிட்டது: அயர்ந்து தூங்கிவிட்டேன். ஸ்னானம் செய்து, உடலின் அசதி தீர்ந்தாற் போல், ஒரு புது உணர்ச்சி யுடன் விழிப்பு வந்தது. இன்னும் விடியவில்லை. வாசற் கதவு க்றீச்சிட்டுக்கொண்டு மெதுவாய் நகர்ந்து கொண்டே திறந்தது. ஒரு உருவம் என்னருகே வந்து திண்ணைத் துணைக் கட்டிக்கொண்டு அதன் மேல் சாய்ந்து நின்றது: நீண்ட இமைகளில், நீண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/75&oldid=1283296" இலிருந்து மீள்விக்கப்பட்டது