பக்கம்:கங்கா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

65


சிலருக்கே தனியாக வாய்ந்த வரம், அவர்கள் ஆத்ம சக்தி துவும் சொக்குப் பொடி, அடே கஸ்தூரி, உனக்கு அமைந்த பேரடா ! நம் ஒற்றுமையைத் தெருவின் கண்ணே சுட்டுவிட்ட தடா நெருப்பில் நல்ல நெருப்பு, பொல்லா நெருப்பு இரண்டுமே சுடுநெருப்புத்தானே ! நாமிருவரும் ஆபிஸுக்குப் போம்போது எத்தனை முறை சிவப்புத்தலைப்பா எச்சரித்திருக்கிறது : "இந்த ம்ாதிரி பக்கத்தில் பக்கத்தில் தோளைத் தொட்டுக்கிட்டுத் தெருவை அடைச்சுக்கிட்டு சைக்கிள் விடாதீங்க ஸார் : ஆனால், கேட்டோமோ ? ஆனால், ஒரு தரமேனும் கேஸ் எழுத 344க்கு மனமில்லை. திருப்பத்தில் நாம் வரும்போதே பாரா து போல், சிரிப்பையடக்கிக் கொண்டே திரும்பிக்கொள்வான். ஒரு தடவை நினைவிருக்கிறதா ? பேச்சு ஸ்வாரஸ் பத்தில் தராசு பிசகி, லைகிளோடு லைகிள் மோதி முடிந்துகொண்டு, நாம் நடுவில் விழுந்து மாட்டிக் கொண்டு, பின்னால் ‘பூம் பூம் !!” ப்ரேக்குகளின் க்றீச்-என்னை எப்படிய டா அப்படியொரு குண்டுக் கட்டாய்த் தூக்கிக் கொண்டு ப்ளாட்பாரத்திற்கு ஒரு தாவு தாவினாய்? - பிறகு அதைப்பற்றிப் பாராட்டாய் ஒரு வார்த் தைக்குக் கூட யாருக்கும் நீ இடம் விடவில்லை. சாவித்ரி கண்கலங்கினபோது - அவள் வாய் பேசாள், மனந்தாங்காள் - "என்ன மன்னி ? உன் அகமுடை யானைப் பத்திரமாய் உன்னிடம் சேர்த்தபின் ஏன் அழுகை ? சேர்த்தேனே என்றா ?” என்று கேலி பன்னினாய், "அந்த மாதிரி சமயங்களில், மனிதன், தான் கதா நாயகனாகத் திட்டமிட்டா காரியம் செய்கிறான்? க-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/79&oldid=1283299" இலிருந்து மீள்விக்கப்பட்டது