பக்கம்:கங்கா.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 岛韶蕊露” "லார், கஸ்தூரி-” "ஆ, கஸ்தூரி. கஸ்தூரியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் அல்லவா ?” - கேள்வியில் கேலியில்லை. ஆனால் பரிவுமில்லை. நான் மெளனமாய்த் தலையசைத்தேன். என் முகத்தில் ரத்தம் குழம்பிய வேகத்தில் கன்னங்கள் குறுகுறுத்தன. "மிஸ்டர் கீர்த்தி, இது பாங்க்: ஒரு வியாபார ஸ்தலம், அதிலும் நம்முடைய பாங்க் மிகப்பெரிய வியாபார ஸ்தலம். வியாபாரஸ்தலத்தில் வியாபாரத்தைத் தவிர சொந்த உணர்ச்சிகளுக்கு இடமில்லை. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். மூவாயிரம் மைல் தூரத்தி லிருந்து என் உற்றார் உறவினரைப் பிரிந்து வந்திருக் கிறேன். ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறைதான் என் பெண்டுபிள்ளைகளிடம் நான் போக முடியும். இடையில் எனக்கோ அவர்களுக்கோ என்ன நேர்ந்தாலும் கடவுளுக்குத்தான் புண்ணியம். நாம் எல்லாரும் பாங்க் ஊழியர்கள் என்ற முறையில் ஒரே குடும்பம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு குடும்பமாய் பாங்கின் நன்மை எனும் ஒரே குறிக்கோளுக்குத்தான் உழைப்பவர்கள். தவிர மிஸ்டர் கீர்த்தி-இது உத்யோக முறையில் அல்ல...சொந்தமாய் நம்மிடையில்-யாரிடமும் அன்பாயிருங்கள், நட்பை வளருங்கள். கூடப்பிறந்தவர் களாயிருந்தால் ரத்தத்தின் ஒட்டுதலைக் கொண் டாடுங்கள். ஆனால் எவரிடமும் பாசத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். அது காலைப் பின்னி, கையைக் கட்டி, கழுத்தையிறுக்கி, கடமையை அழித்து, ஆளை அவமானத்தில் ஆழ்த்திவிடும். இதற்குப் பின்னும் ஏதாவது கேள்வி உண்டா ?” நான் அடைத்தவாயுடன் திரும்பினேன். "என்ன, திக் விஜயம் பண்ணி வந்தாச்சா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/88&oldid=764470" இலிருந்து மீள்விக்கப்பட்டது