பக்கம்:கங்கா.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

81


"என்னை எப்போ கூட்டிக்கப் போறேள் ?” அந்த மூர்க்கம் ஒன்றே போதும். நான் அவளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. நான் கேட்டதுமில்லை. கிட்டு பிறந்த ஒரு மாதத்திலேயே திரும்பிவிட்டாள். பிறகு இன்னும் பிறந்தகம் போகப் போகிறாள். ஊஹாம்: அவளுக்கு அங்கு திக்கில்லை. கஸ்தூரியின் எதிர்பாராத மாற்றல் இல்லாவிடில், சாவித்திசியின் பிள்ளைப்பேறுக்கு மங்கையை நம்பியிருந்: தேன். "மங்கையை நிறுத்தி வைத்துக் கொள்கிறேனே" என்றுகூட கஸ்தூரியிடம் பிரஸ்தாபித்ததற்கு,"எங்கேப்பா, அவ்வளவு தூரத்திலிருந்து நான் திரும்பி வந்து இவளைக் கூட்டிப் போவது, அல்லது நீ கொண்டுவந்து விடுவ தெல்லாம் லேசாயிருக்கிறதா? அவளும் கிராமத்துப் பெண் ஏற்றிவிட்டால் வந்து சேர்வாள் என்ற தைரியமுமில்லை. நாங்கள் எப்படி வந்தோமோ அப்படியே போய்விடு கிறோம்.” அவன் அப்படிச் சொல்கையில் எனக்கு நெஞ்சை படைத்தது. அவன் சொன்னதும் வாஸ்தவந்தான். பாதையின் இரு பக்கமும் மைதானம் அகன்று விரிந்தது. வானவிளிம்பில் தோப்புகளின் பச்சை, மேகங் களுடன் இழைந்த இடத்தில், இடி, துண் திணித்த வாய் போல் எட்டக் குமுறிற்று. வாழையிலைமேல் அல்வாத் துண்டுபோல் ஸ்ைகிள் வழுக்கிக்கொண்டு போயிற்று. "அப்பா ?” "என்ன ?” "நேக்கு ஐக்கிரிம் வாங்கித் தரையாப்பா ?” க-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/95&oldid=1283311" இலிருந்து மீள்விக்கப்பட்டது