பக்கம்:கங்கா.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 கங்கர "அது சரி, ஐஸ் க்ரீமுக்கு இதாண்டா ச ரி யா ன வேளை !” "கச்சூவி மாமா வாங்கித் தவ்வாளே யூனுலே நக்கி நக்கித் திம்பேனே, தொப்பைக்குள்ளே சில்லுனு. போகுமே ! நல்லாயிருக்குமே !” "ஒஹ்ஹோ, அப்படியா அது ? கிட்டு, உனக்கு யார் மேலே ஆசை ?” "அப்பா மேலே ஆச்சை. அம்மா மேலே ஆச்சை, கச்சூவி மாமாமேலே ஆச்சை, கச்சூவி மாமா எல்லாம் வாங்கித்தவ்வாளே சாக்கேட்டு, கேக்கு : "அப்படியா ?” "அன்னிக்குக்கூட வாங்கித் தந்தாளே !” "என்னிக்கு!” "நாளைக்கு-நீ கூட ஆபீசிலிருந்து லாத்திரி வந்தையே நீ வரத்துக்குள்ளே நான் கூடத் துரங்கிப் போயிட்டேனே ?” "எப்போ ?” “தாங்காலமா கட்டில்லே அம்மா மடிலே நான் தாச்சிண்டிருந்தேனே கிட்டு, என் கையிலே என்ன பாரு’ன்னு கக்குவி மாமா எட்டிப் பார்த்து, கையிலே ரவுண்டு பப்புட்டு வெச்சுண்டு காமிச்சாளே ! நான் ஏந்து ஓடிவந்தேன். என் கையிலே நெண்டு. பப்புட்டு தந் தாப்பா தந்து என்னை "ஜம்மு’னு தூக்கி வெளியிலே வெச்சுக் கதவைத் தாத்திண்டுட்டாளே ! அப்புறம் நான் அம்மாகிட்டப் போணும்னு அயிதாக்கூடத் திறக்கல் லேப்பா !” அப்பவே இலை உதிர்ந்த பிரம்மாண்டமான மரம் போல் ஒரு ராக்ஷஸ் மின்னல் கிளைபிரிந்து வானத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/96&oldid=764479" இலிருந்து மீள்விக்கப்பட்டது