பக்கம்:கங்கா யாத்ரா தீபிகை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாற்றுக் கவிகள். கஞ்சை சதாவதானம், சுப்பிரமணிய ஐயரவர்கள் இயற்றிய வெண்பா. வையகத்துச் சைவ வயிணவ தலச்சேவை செய்யு மகா யாத்திரைக்கோர் தீபிகையைக் கையளித்தான் பேருக் கியற்கையதாப் பேரி சிவராம மகான் யாருக்கு வேண்டா திது. மதுரைத் தமிழ்ச்சங்க வித்வான்களிலொருவரும் திரிசிரபுரம், S.P. G. காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமாகிய கனம் M. வெங்கடசாமி நாட்டாரவர்களியற்றிய - எழுசீரடியாசிரிய விருத்தங்கள். தற்கொரு குறியுங் குணமுமில்லாத தனிப்பாஞ் சுடாரு ளாலே, முற்படுமைந்து தொழிலியற்றுகைக்கா மூவகை மேனி கொண்டுழியும், அற்பமுமறியா விண்டையோர்க்காக வாலயங் களினெழுந்தருள் செய், பொற்புறு குறியைக் காணுமா செல் லும் புனிதருக் குவகை மீப்பொங்க, சீர்பெறுந் தலங்கடீர்த்த மூர்த்திகளினியல்புகள் செல்லுதற் குரிய, நேர்பெறு நெறிகளாங்குறு நிகழ்ச்சி யாத்திரை நியமங்கள் பிறவும், ஏர்பெற விளக்கி யதன் பெயர்காசி யாதிமான் மியமென ஈந்தான், பார்பெறு மந்நூற் பெருமையை யநந்தன் பகரினும் பகாலாம் படித்தோ . அப்பெருநூலை யளித்தவனாவான் ஆளுடையாசனுக்கீசன், செப்பரு கயிலை காட்டிய பெருமைத் திருவையாறெனும் பதி யிடையே, ஒப்பரு மறையோர் குலமெனு முத்தியுதித் தொளிர் பானு நற்கலை தேர், திப்பியன் ராமச்சந்த்ரமாதவர்க்குச் சேயென வந்தசே யென்னான்.

துங்கநல் வேதத் துறைவழி யொழுகுந் தூய்மையன்றுக ளிலா மதியன், பொங்கராவணிந்த புரிசடைப்பாமன் பொன்ன டிக்கன்பு பூண் டொழுகும், புங்கவன்றினமு மங்கியே வளர்க்கும் பூசுரன் காசியில் வதிவோன், மங்கலந் திகழு நூலணி சிவராமப் பெயர் முனிவரன் மாதோ.

4