பக்கம்:கங்கா யாத்ரா தீபிகை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீ சற்குரவேநம: PREFACE TO THE FIRST EDITION. நூன்முகம்.

வடக்கில் இமயமா மலை, கிழக்கில் கங்காசாகரமென்னும் கங்காந்தி சமுத்திரத்தில் சங்கமமாகும்க்ஷேத்திரம், தெற்கில் கன்னியாகுமாரி க்ஷேத்திரம், மேற்கில் விந்து நதி இந்தான் கெல்லைக்குட்பட்ட நம்மிந்துக்களுக் குறைவிடமாகிய இவ்வாரியா வர்த்தமென்னும் பரதக்கண்டத்தில் வேதமேநமக்கு முக்கியப்பிரமாணம். அவ்வேதத்தின் கருத்து. - இந்நெடிய கடல் சூழ்ந்த இத்தொல்லுலகின் கண்ணுள்ள பிரமசிருஷ்டி எண்பத்து நான் குலக்ஷம் ஜீவராசிகளுள், பிறப் பிறப்பிற்குக் காரணமாயுள்ள இச்சம்சார சாகரத்தைத் தாண்டக்கூடிய ஞானத்தையடைந்து முத்தியடையத் தகுகியுடையது இம்மானிட ஜென்மமே யென்றும், அவ்வா றடை வது அவரது கடமையென்றும், அம்முத்தியை அடைய பக்தி, கர்மம், ஞானம் என்னும் மூன்று வழிகளுள், பக்தி, கருமங்களா லெய்தும் ஞானத்தால் அன்றி முத்தி கைகூடாதாகையால், அவ்விரண்டு மொருங்கமைந்துள்ள புண்ணிய வேஷத்திர தீர்த்த யாத்திரையே சுலபமார்க்கமாயிற்றென்க.

1