பக்கம்:கங்கா யாத்ரா தீபிகை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கனமாகவும் சர்வ ஜீவ கருணாநிதியாகிய பரமசிவன் பந்தபாசத்தினால் கரையேற வழிதெரியாது திரிந்தலையும் ஆன்ம கோடிகள் பிறத்தல், இறத்தல், காண்டல், நினைத்தல் முதலிய வைகளால் அடையும் பவரோகத்தை நிவர்த்தித்து பாகதியடையச் செய்யுமா றெழுந்தருளிய ஸ்தலங்களனேக மிருப்பினும், அவை களனைத்து மொருங்கமைந்துள்ள தாயும், தேவாமிருதவாரிதி யனைய ஸ்ரீகங்கை மாந்தியைத் தன்பாற்பெற்றதாயும் எம்பெரு மான் றேவியாரோடினிது வீற்றிருக்கும் ஸ்தலமாயும் சர்வோத் கிருஷ்டமாயும் விளங்குவது ஸ்ரீ காசியம்பதியே யாதலானும் அதற்கங்கமான இராமேஸ்வராதிகளைப் பற்றியும் இவையல்லாத நம் வேதசாஸ்திர புராணே திகாசங்களிற் கூறப்பட்டுள்ள இப் பரதகண்டத்தின் க்ஷேத்திர தீர்த்தங்களைப்பற்றியும் விவரித்தலா னும், அக்ஷேத்திர தீர்த்தங்களை யடைந்து அவ்வவ்விடங்களிற் செய்யவேண்டிய முறைகளை யெடுத்துக்கூறுதலானு மிந்நூலிற்கு ஸ்ரீ காசியாதிமான்மிய கங்காதியாத்ரா தீபிகை யெனப் பெயர் பொ ருத்தப்படலாயிற்று.

இவ்வரிய நூல் அடியிற்குறித்த ஒன்பது அத்தியாயங்களாக பகுக்கப்பட்டிருக்கின்றது :

1. புண்ணியஸ்தல தீர்த்தயாத்திராப் பொது விதிகளும், ஸ்ரீகாசிரகசியமும், விபூதி உருத்திராக்ஷ மகிமையும். 2. ஸ்ரீ காசி, கங்காமான் மியங்கள். 3. பூபிரதக்ஷிண யதோக்தபாரத நவகண்ட யாத்திராக் கிர மமும், அவைகளின் க்ஷேத்திர தீர்த்த மூர்த்தி விவரங்களும், மஜிலிகள் முதலிய சௌகரியங்களும். -4. இராமேசுவரத்திலிருந்து ஸ்ரீகாசிக்குச்செல்லும் மேல, கீழ மார்க்க மிரண்டிலுந் தொடர்ச்சியாய் ஒவ்வொரு ரெயில்வே ஸ்டேஷனும், மெயில் வண்டித் தொடர்களின் கால நிர்ணயங்களும். இறங்கக்கூடிய மஜிலிகளும், பிரயாண சௌகரியங்களும், ரெயில் சார்ஜ் (கட்டணம்) விகிதமும். 5. பிரயாணிகளுக் கவசியமான ரெயில்வே சட்ட திட்டங் கள். 6. க்ஷ பூபிர தக்ஷண யாத்ரா மார்க்க மல்லாத இதர க்ஷேத்திர, தீர்த்த, மூர்த்திகள்.

7. இமயமா மலையின் கண்ணுள்ள க்ஷேத்திர தீர்த்தங்கள்.

2