பக்கம்:கங்கா யாத்ரா தீபிகை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஷ ஸ்ரீ காசி இராமேசுவரத்திற்குச் செல்ல நாட்டு மார்க்கமும், அவைகளின் மற்றைய விவரங்களும். 9. சேர, சோழ, பாண்டியாதி திராவிட தேசத்தின் கண் ணுளதாய மூவரால பாடல்பெற்ற சிவக்ஷேத்திரங்களின் பெயர், தீர்த்தம், மூர்த்தி, விருக்ஷம், சுவாமிபெயர், அம்மன் பெயர் முத லிய விவரங்கள். 10. அநுபந்த அத்தியாயம்:- ஸ்ரீவிஷ்ணு ஸ்தல மஹாத்மிய சாரசங்கிரஹம். - குறிப்பு:-ஷ பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயமாகிய ஸ்ரீகாசி கங்காமான்மியங்கள் மட்டும் இப்புத்தகத் திலடங்கியிருக்கின்றன இது போலவே மற்ற ஒவ்வொரு அத்தி யாயம் தனித்தனி புஸ்தகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ஸ்காந்தம், பதுமம், இலிங்க புராணங்கள், தைத்திரீய கைவல்ய மண்டூக்கியோப நிஷத்துக்கள் : நாகேஸ்வரர் செய்த திரித்தலிம்சது, சுரேசுராசிரியர் செய்த மிருதிமோக்க நிர்ணயம் , காசிமான்மியம், திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, திருவள்ளுவர் வாக்குண்டாம், இருசமயவிளக்கம், பெரிய புரா ணம், பாதமோத்தர புராணம், வில்லிப்புத்தூராழ்வார் பாரதம், காஞ்சிப்புராணம், திருவள்ளுவர் மாலை, தொல்காப்பியம், ஜீவக சிந்தாமணி, பிரயோக விவேகம், சிலப்பதிகாரம், ஸ்ரீமத் கம்பரா மாயணம், ஏற்றெட்டு திருப்பதியந்தாதி, திராவிடவேதமாகிய தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், ஆரியப் புலவர் பாகவதம், நாலடியார், காசிகாண்டம், கொலை மறுத்தல், சேஷத் ருமம், அத்தியாத்மிக ராமாயணம், நாரதீய புராணம், சிற்பசாஸ் தரம், நைஷதம், தயாசதகம், பாதுகாசகஸ்ரம, விசுவகுணாதிர் ஸியம் முதலிய நூல்களின் சில சுலோகார்த்தங்களும், வேறு சில பாடல்களும், இந்தியன் ரெயில்வே கயிட்ஸ் விவரங்களும், ஆங்காங்கு உதாகரிக்கப்பட்டிருப்பினும், பொதுவாகப் பெரும் பான்மையும் பண்டிதரல்லாத எனைய சாதாரன ஜனங்களினுப் யோகத்தன பொருட்டே, மிகவும் எளிய செந்தமிழ் நடையில் இந் நூலை ஜகத்குரு ஸ்ரீமத ஆதி சங்கராசாரிய ஸ்வாமிகள் திருவாக்ஞைப் படி எடுத்து எழுதியிருப்பதால் இதன் கணுளதாய குற்றங்குறை களைத் திருத்தங்களுடன் தெரிவிப்போருக்கு நன்றி பாராட்டப் படும. ஸ்ரீ பஞ்சநதமென்னும் திருவையாறு, கிரந்தகர்த்தா , தஞ்சாவூர் ஜில்லா.

அடியார்க்கடியேன். ஓம் சுபம்.

3