பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்?



 

மிழ் நாட்டில் மிகப்பழங்காலந் தொட்டுப் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரலாயின. சங்க கால இலக்கியங்களைத்தாம் மிகப்பழமை வாய்ந்தன என்று சொல்லுகின்றோம். காலம் கழியக்கழிய இடைக் காலத்தே பல்வேறு இலக்கியங்கள் தோன்றலாயின. அவ்விலக்கியங்களுள் சில இயல்பாகத் தோன்றின. சில பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டன. மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் இடைக்காலத்தில் பலப்பல தோன்றின போதிலும் அவற்றுளெல்லாம் மிகச் சிறந்த காவியமாகக் கம்பராமாயணம் திகழ்கின்றது.

தமிழ் மொழியில் இன்று எத்தனையோ நூல்கள் மொழி பெயர்க்கப் பெறுகின்றன. ஆங்கிலத்திலிருந்தும் பிறமொழிகளிலிருந்தும் புத்தம் புதிய கலைகளும் காவியங்களும் பெயர்த்து எழுதப்பெறுகின்றன. ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறிச் சென்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார். ஆகவே, மொழிபெயர்ப்பு இன்றியமையாது மொழி வளர்ச்சிக்கு வேண்டப்படுவதொன்றாகிவிட்டது. அதன் வழியேதான் பல புதினங்களும் இலக்கியங்களும் பிறமொழிகளிலிருந்து தமிழில் ஆக்கப்பெறுகின்றன. கங்கை பாய்தோடும் இவ்வங்க நாட்டுக் கவிஞர் தாகூரின்