பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னர்?

99


வென்கின்றனர். அவர்கள் உண்மை உணராது கூறுகின்றார்களா, அன்றி உணர்ந்து வேண்டுமென்றே கூறுகின்றர்களா என்பது அறிய முடியாத ஒன்று.

கம்பரைத் தீர்க்கதரிசி என்பார்கள். அது எவ்வளவு உண்மையோ நாமறியோம்; எனினும், இவ்வாறு ஒரு காலத்தில் தம்மைப் பழிப்பவர்கள், தாம் பிறந்த தமிழ் மண்ணிலேயே இருப்பார்கள் என்று அன்றே எண்ணிய கம்பர், உலகம் தம்மை இகழ்ந்தாலும் - தம்மேல் மாசு உண்டு என்று கூறினாலும், தாம் உயர்ந்த கவி நலத்தை உலகுக்குக் காட்டப்போவதாக உறுதி செய்துகொண்டு தான் தம் நூலையே தொடங்குகின்றர். ஆனால், அவர் அத்தனை எதிர்ப்புக்கிடையில் இராமனகிய தெய்வத்தைப் பாடுவதாகக் குறிக்கவில்லை. உயர்ந்த கவியின் இலக்கணத்தை உலகுக்குக் காட்டவே தாம் நூல் எழுதியதாகக் குறிக்கின்றார். அவையடக்கத்தே,

‘வையம் என்னை இகழவும் மாசுஎனக்கு
எய்த வும்இது இயம்புவது யாதுஎனில்
பொய்யில் கேள்விப் புலமையி னேர்புகல்
தெய்வ மாட்சிக் கவிதை தெரிக்கவே.’

என்று கூறுவதை நோக்கின், இவ்வுண்மை விளங்காமற்போகாது. ஆகவே, பொய்யில் புலவராகிய வள்ளுவர் முதலியோர் சொல்லிய மேலான கவி நலங்களையெல்லாம் உலகறியச் செய்யவே தாம் இராமாயணம் பாடுவதாகக் குறிக்கின்றார். ஆம்! அது இன்று உலகறிந்த கவியாக உலகத்தாபனமாகிய ஐக்கிய நாட்டு அரங்கேறுகிறதல்லவா உண்மை இவ்வாறாக, தமிழை வாழ வைத்த கம்பரைத் தள்ள விரும்புவது எத்துணைப் பொருந்தாத செய்கை! ஆனால், யார் கூடி நின்று எத்துணை வழியில் அவரை மறைக்க முயன்றாலும், அவர் புகழ் சுடச்சுடரும் பொன் போல மேலும் மேலும் ஒளிவிட்டுக்கொண்டுதான் இருக்கும் என்பது உறுதி. இவ்வாறெல்லாம் கூறுவதனால் கம்பர் கூறும் அத்தனையும் நூற்றுக்கு நூறு சரி என்று நான் வாதிட வரவில்லை. அவர் நூலில் சில தவறுகள் இருக்க-