பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்

103



'

தாவரும் இருவினை செற்றுத் தள்ளரு மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில் போவது புரிபவர் மனமும், பொன்விலைப்
பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே!’

(தாடகை வதை, 15) என்ற பாடல் அறிந்தறிந்து இன்புறத் தக்கதன்றே!

இனி, உலகில் பிறந்தவெல்லாம் அன்பில் கட்டுப்பட வேண்டுவனவே என்பதையும், 'அன்பகத்தில்லா வாழ்வு பசை அற்ற வற்றல் வாழ்வு' என்பதையும் கம்பர் நூல் முழுதும் காட்டிக்கொண்டே செல்கின்றர். மனிதன் அன் பொடு பிணைப்புண்டவன். ‘அன்பின் வழியது உயிர் நிலை: என்று வள்ளுவர் காட்டியுள்ளாரே! அந்த அன்பின் நூல் கொண்டே இராமாயணப் பாடல்களாலாகிய மாலை கோக்கப் பெறுகின்றது. அரசர் குலத்திலே பிறந்தவனகிய இராமன் தன் உடன் பிறந்த தம்பியர் மூவரோடு மேலும் மூன்று தம்பியரைத் தேடிக்கொண்டான்.

செல்லுமிடமெல்லாம் அவனுக்குத் தம்பியர் சிறந்தனர். காட்டிலே வேடர் குலத்திலே பிறந்த குகன் அவனுக்குத் தம்பியாயினான். உடன் பிறப்பாலோ இரத்த பாசத்தாலோ அல்ல; உற்ற அன்பினலே. இந்த உண்மையைக் கம்பர் இராமன் வாக்காகவே நன்கு விளக்குகின்றார்.

'முன்புளம் ஒருநால்வேம் முடிவுளது என உன்னா
அன்புள இனிநாம்ஒர் ஐவர்கள் உளராலோம் '

என்று என்றும் முடிவற்ற எல்லை இல்லாத அன்பே அவனே உடன் பிறந்தவனுக்கிற்று எனக் காட்டுவது சாலச் சிறந்த தன்ரோ! இப்படியே பின் குரங்காகிய சுக்கிரீவனையும், பகைவனுக்கு உடன் பிறந்தவனாகிய விபீடணனையும் தன் தம்பியராக இராமன் அன்பினலேயே ஏற்றுக் கொள்ளுகிறான். விபீடணனிடம் அவன் கூறும் சொற்கள் நோக்கத் தக்கன.