பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்




குகனோடும் ஐவ ரனோம் முன்புபின் குன்று சூழ்வான் மகனோடும் அறுவ ரானோம் எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல்ஐய! நின்னெடும் எழுவ ரானோம்
புகலருங் கானம் தந்து புதல்வரால்பொலிந்தான் உந்தை

'

என்கின்றன் இராமன். இந்த உடன் பிறப்புப் பாசம் பற்றியும் இதன் அன்பின் நிலைபற்றியும் இராமாயணத்தில் பற்றுள்ள அனைவரும் பேசக் கேட்டிருப்பீர்கள். ஆகவே, அது பற்றி நான் அதிகம் கூறுது, மாறுபட்ட கருத்துடைய உடன் பிறப்பாளர்கள் தத்தம் இறுதிக் காலத்தில் தம்மை மறந்து உள்ளத்தைத் திறந்து காட்டும் சகோதர பாசத்தை ஈண்டு விளக்கிக் காட்டுகின்றேன்.

உடன்பிறப்புப் பாசத்தை உள்ளத்திலே அடக்கி வைத்தவருள் வாலி சிறந்தவன். அவன் தம்பியாகிய சுக்கிரீவன் அவனுக்குக் கொடிய விரோதியானன். யாரோ வழியிடை வந்தவன் துணையைப் பற்றிக்கொண்டு. அவனக் கொல்லவும் துணிந்துவிட்டான் தம்பி. கொன்றவனும் எதிரில் வரமாட்டாமல் மறைந்து நின்று கொன்றுவிட்டான். அப்படியிருந்தும், வாலி தன் தம்பியின் மீது வைத்திருந்த உடன் பிறப்புப் பாசத்தை அவனது இறுதி முச்சின் வழி வெளிக்காட்டுகின்றார் கம்பர். குரங்கினத் தலைவனேயாயினும் அவன் உள்ளம் அனைத்திலும் மேலாய மனிதப் பண்பினைப் பற்றி நின்றதைக் காட்டி, அதுவே, தம் மனிதப் பண்பை விட்டு விலங்கினத்தின் உளப்பாங்கை நாடி விரைந்து செல்லும் மாக்கள் இனத்துக்கு ஒர் உணவுட்டும் வகையில் தம் கவிதையைக் காட்டிச் செல்லுகின்ற கம்பர் நிலை சிறந்த ஒன்றாகும்.

வாலி இராமன் அம்புபட்டு வீழ்ந்து மடியும் தறுவாயில் இருக்கின்றான். மறைந்து அம்பெய்த இராமன் அப்போது அவன் முன் வந்து நிற்கின்றன். இராமன் செய்தது அடாதது என்பதை இடித்து இடித்து உரைக்கின்றன் வாலி. ஆனால், இறுதியில் தன் தம்பியைப் பற்றி எண்ண