பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


 காண்கின்றோம் நாம். கும்பகரணன் இராவணன் முதலியோர் தம் வாழ்வும் வரிசையும் கெட நின்றவன், அவர் தம் தம்பியாகிய வீடணன் என்பதை நன்கு உணர்வோம். கும்பகரணனே அவ்வுண்மை அறிந்தவன்தான். தங்கள் அரசாங்கம், உயிரியல்பு, போர்முறை ஆகியவற்றின் உண்மைகளையெல்லாம் மாற்றானுக்குக் காட்டிக் கொடுத்த விபீடணன் இன்றேல், தங்களை மாய்க்க இராமனால் முடியாது என்பதை நன்கு உணர்ந்தவன் அவன். அவன் போர்க்களத்தில் இராமன் அம்பு பட்டு மாயும் நிலையில் மயங்கிக் கிடக்கிறான். அவன் அறிவான் இராவணனும் பிறரும் இறக்க, வீடணன் மட்டும் உயிர் பிழைப்பான் என்பதை. எனவே, அவனைத்தான் அடைக்கலப் பொருளாக இராமனுக்குக் கொடுக்கின்றன். அவன் வாய் மொழியைக் கம்பர்,

'நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்த சிறு நெறியறியான் என்தம்பி
ஆதியாய்! உனை அடைந்தான் அரசர் உருக் கொண்டமைந்த
வேதியா! இன்னும்உனக்கு அடைக்கலம்யான் வேண்டினேன்"

(கும்பகர்ணன் வதை. 353)

என்று அழகுபடக் காட்டுகின்றார். இவ்வாறு பற்று வைத்த தம்பியோடு அவனும் ஏன் வந்துவிடலாகாது என்ற ஐயம் எழுதல் இயல்புதான். ஆனால், அடுத்து உடன் பிறந்த இராவணனை விட்டு அவன் எப்படி வர இயலும்? அங்கும் அவனது உடன் பிறப்புப் பாசம் உந்துகின்றது. தம்பியரோடும் தங்கையரோடும் பிறந்து நெடுங்காலம் பலவுலகாண்ட தன் அண்ணன் இறுதி நாளில் ஒருவரும் இன்றி மாண்டு கிடப்பதா என்ற உணர்வு தூண்டுகிறது. அவ்வுணர்வு கம்பர்வழிப் பாட்டாய் வருகின்றது. இதோ அவ்வுணர்ச்சிப் பாடல்: -

தும்பியங் தொடையல் வீரன் சுடுகணை துரப்பச் சுற்றும்
வெம்புவெஞ் சேனை யோடும் வேறுள கிளைஞ ரோடும்