பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் என்ன சொன்னார்?

115


காட்டுக்கனுப்பிவை’, என்ற கூனியின் கூற்றைக் கேட்டதும் கைகேயி,

‘எனக்கு நல்லையு மல்லைநீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையு மல்லைநீ தருமமே நோக்கில்
உனக்கு நல்லையு மல்லைநீ ஊழ்வினை வசத்தால்

மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தாய்!’

என்கின்றாள். பாவம்! அவள் கூனியைக் கடிந்துரைத்தாலும் அவளைக் கெட்டவள் என்று கூற விரும்பாது ஊழ்வினையே அவள் மனம் திரித்தது என்கின்றார். இப்படி மற்றவர்களைக் குறை கூற விரும்பாத கைகேயி ஒரே ஒரு செயலுக்காகப் பழியினைத் தான் ஏற்றுக்கொள்ளுகிறாள். அதுதான் தன் கணவன் கொடுத்த வாக்கைத் தவறினான் என்ற பழியில்லாது போக்கிய தன்மையாகும்.

கைகேயியை மட்டுமன்றிக் கம்பர் யாரையுமே தீயவராக்க விரும்பவில்லை. மிகப் பெருங்கொடுமை இழைத்த இராவணனைக் கொடியவன் அல்லன் என்று கூறுகின்றார். பெருந்தவத்தால் பிறந்தவன் இராவணன்; தானே பெருந்தவத்தைச் செய்து சிறந்தவன். அத்தகைய தவத்திருப் பெற்றவன் இத்தகைய கொடுமைகளையெல்லாம் செய்தான் என்றால், அவனுக்கு உண்டாகும் இழுக்கினைக் காட்டிலும் அத்தவத்திற்கல்லவர் பெருங்குற்றம் உண்டாகும்? எனவே, அந்த மாசினைப் போக்கவும் இராவணனை நல்லவனாக்கவும் அவர் மருந்து தேடுகின்றார். அது விதியாகின்றது. விதியை நம்புபவர் நம்மவர். முன்னை வினை வந்து மூளும் என்ற நியதியை மறுப்பார் இல்லை. மற்றும் இராவணனுக்கு உற்றவர் பலர் தீங்கிழைக்கவே, அவன் கெட்டவன் ஆயினான் என்பதையும் கம்பர் காட்டுகின்றார். தன்னைக் கொடுமை செய்ய வந்த இராவணனை வெறுக்காது, அவன் கெட்டது வினையின் காரணம் என்றும் இடித்துரைப்பார் இல்லாமையே என்று சீதை கூறுகின்றார். செய்வினைக்குத் தப்பினவர் இராவணன் குல முதல்வனான