பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

129


நோக்கினான். நளன் அதைப் பற்றி வரப் பணித்தான். அந்த இடத்திலே அவன் நாட்டின் இயற்கை வளத்தைப் பாராட்டுகின்றார் புலவர்.

‘பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக்—கோதிக்
கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து.’

(31)

என்ற புலவர் காட்டும் இயற்கைக் காட்சி அந்நிடத நாட்டு நீர்வளத்தையும், வயல் வளத்தையும், கரும்பிலே முத்து விளையும் சிறப்பையும் காட்டுகின்றதன்றோ? அத்துடன் மேதிக் குலம் மென்கரும்பை மிதித்துக் கடித்து அதில் உள்ள முத்தை எடுத்து எறியும் நாடன் என்று காட்டி, அவ்வாறு தன்னையும் துன்புறுத்துவானோ என்ற அன்னத்துக்குமுன் அவ்வாறின்று என உரைப்பதுபோல, பிழையாமல் ‘பிடித்துத்தா’ என்று ஆணையிடுகின்றான் என்கிறார் புலவர். இனி, அந்த அன்னம் தன் கையிடை அஞ்சி நடுங்குவதைக் கண்ட அரசன் கூறியதாகப் புலவர்,

‘அஞ்சல் மடஅனடமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்—விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பீடித்ததார் மன்.’

என்று பாராட்டும்போது நாமும் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாதே! உடனே அன்னம் தளர்வு நீங்கிற்று என்கின்றார். நாம் அதுபற்றிக் கவலவேண்டா . ஆனால், அவ்வன்னத்தோடு அவன் பேசிய சிறப்பே நாம் நோக்க வேண்டும். அதைப் பிடித்தற்கு அவன் காட்டும் காரணம் என்ன? பெண்கள் அன்னநடை உடையவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்றாலும், எனக்கு அது சரி என்று படவில்லை. உன் நடைதான் சிறந்ததாக வேண்டும். எனினும், அந்த உண்மையை நேரில் கண்டு அறிந்து

9