பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்



 

மிழ் இலக்கிய வரலாற்றின் மிகப் பழைய காலம் தொட்டு—வரலாறு இன்னதென வரையறுக்க முடியாத அந்த நெடுங்காலம் தொட்டு—நேற்று வரை இலக்கியம் வளர்ந்த வகையினை இத்தனை நாட்களும் ஒருவாறு கண்டுகொண்டே வந்தோம். இடைக்காலத்தில் வாழ்ந்த கம்பர், சேக்கிழார் போன்ற பெரும் புலவர் தம் வரலாற்றையும் அவர் வழித் தமிழ் இலக்கியம் வளர்ந்த வகையினையும் ஒருவாறு கண்டோம். இன்று, இந்த நூற்றாண்டில், அதிலும் நாம் வாழும் இந்த நாளில், தமிழ் இலக்கியத்தின் வாழ்வு எத்தகையது என்று காண்பதே இன்றைய பேச்சின் நோக்கம். இத்தமிழ் மாணவர் மன்றத்தார் பேச்சு வரிசையின் இறுதியில் இத் தலைப்பை அமைத்த முறை, அவர்கள் உணர்வையும் முற்போக்கு நெறியையும் காட்டுகின்றது. தமிழன் பன்னிப் பன்னிப் பழங்கதைகள் பேசுவதிலேயே காலம் கழிப்பான்; ‘என் முன்னோர் வீரம் இப்படி-அப்படி!’ என வானளாவப் புகழ்வான்; ஆனால், ‘உன் செயல் என்ன?’ என்று கேட்டால், பதில் சொல்லத் தயங்குவான். எனவே, தமிழ் மாணவர் மன்றம், அவ்வாறு பழங் கதை கள் பேசுவதோடு அமையாது, ‘தமிழ் இலக்கியம் வளர்த்த பரம்பரை இன்னும் செத்துவிடவில்லை; வாழ்கிறது,’ என்-