பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


விக்கும் உயர்ந்த ஒன்று என்பதும் தேற்றம். அத்தகைய மேலான நெறியிலேயே இன்று தமிழ் வாழ்கின்றது. இன்றைய வங்காளமொழியும் ஓரளவில் அத்தகைய பெருநிலையில் சிறக்கின்றது என்னலாம். இரண்டையும் இணைக்கும் பாலமாகவே இந்த மாணவர் சங்கம் போன்ற நல்ல கழகங்கள் இங்குப் பணியாற்றுவது காண உள்ளம் மகிழ்கின்றது!

தமிழ்மொழி தோன்றிய காலம் இது எனத் திட்டமாக வரையறுக்க முடியாது. திராவிடமொழிக் குடும்பங்களுக்கு முதலிடமாய், என்று தோன்றியதென அறிய முடியாததாய் அமைந்த இம்மொழியில் நல்ல இலக்கிய வளம் இருப்பதை யாவரும் அறிவர். தமிழ் நாட்டுக்குப் பல துறையில் பணியாற்ற வந்த மேலைநாட்டு அறிஞர் பலரும் இதன் நலமறிந்து போற்றியுள்ளார்கள். போப்பும், கால்டுவெல்லும், வீரமாமுனிவரும் (பெஸ்கி), பிறரும் தமிழின் நலமறிந்து போற்றியிருப்பதை உலகமே நன்கு அறியும். இம்மொழியில் வரலாறு அறியா அந்த நெடுங்காலத்திலிருந்து இன்று வரை இலக்கியம் வளர்ந்துள்ளதைக் காண வேண்டுவதே எதிரில் நிற்கும் பணியாகும்.

இலக்கியம் என்பது என்ன? பாட்டா, உரைநடையா, அன்றி வெறுஞ் சொல்லடுக்கா, அன்றி வேறு ஏதாவதொன்றா? மொழியே இந்த இலக்கிய வளத்தால்தான் வாழ்கின்றது என்று சுருங்கக் கூறுதல் போதும் எனக் கருதுகின்றேன். இலக்கியத்தை ஆராய்ந்த பல மேல்நாட்டு அறிஞர்கள், அது பாட்டாகவும் உரைநடையாகவும் இருக்கும் என்றார்கள், காலச்சுழலில் சிக்கி மடியாது மக்கள் வாழ்வின் விளக்கமாக அமைந்து அவர்தம் பண்பாடு, கலை, நாகரிகம் ஆகியவற்றைக் காட்டும் கருவி